Friday, March 30, 2012

ராகிங்:முஸ்லிம் மாணவன் பலி!



பெங்களூர்:கல்லூரியில் சீனியர் மாணவர்களின் வெறித்தனமான ராகிங்கில் உடலில் தீப்பற்றி சிகிட்சைப் பெற்றுவந்த கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் மரணமடைந்துள்ளார். 
கேரளா மாநிலம் கண்ணூரைச் சார்ந்த ஹாரிஸ்-ஸவ்தத் தம்பதியினரின் மகன் அஜ்மல்(வயது17). இவர் கர்நாடகா மாநிலம் சிக்காபல்லாபூர் ஸாஷிப் கல்லூரியில் முதல் வருட ஏரோநாட்டிகல் எஞ்சீனியரிங் மாணவர் ஆவார்.


கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு அஜ்மலுக்கு உடலில் தீப்பற்றி காயம் ஏற்பட்டது. கல்லுரி ஹாஸ்டலில் உள்ள குளியலறையில் நுழையும் பொழுது உடலில் தீப்பற்றியது. கேரளாவைச் சார்ந்த மாணவர்கள் உள்ளிட்ட சீனியர் மாணவர்களின் ராகிங் காரணமாக அஜ்மலுக்கு உடலில் தீப்பற்றியதாக உறவினர்கள் கூறுகின்றனர். மூன்று மாதத்திற்கு மேலாக அஜ்மலை கேரளாவைச் சார்ந்த மாணவர்களின் தலைமையில் அஜ்மலை ராகிங் செய்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஹாஸ்டலில் உள்ள குளியலறையில் நுழைந்த பொழுது தீப்பற்றியதை தொடர்ந்து தப்பிக்க முயன்ற அஜ்மலின் உடலில் பெரும்பகுதி தீயால் காயமடைந்தது. அருகில் உள்ள மருத்துவமனையில் ஆரம்ப கட்ட சிகிட்சைக்கு பிறகு விக்டோரியா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். சீனியர் மாணவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று அஜ்மலிடம் பணம் கேட்டு மிரட்டியதால் மூன்று மாதம் முன்பு அஜ்மலின் தாயார் தனது தங்கச் செயினை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் சர்ச்சையானதை தொடர்ந்து செயினை விற்று கிடைத்த தொகையில் 20 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதித் தொகையை அடுத்த ஆண்டு தரலாம் என்று உறுதி அளித்தனர். ஆனால், பின்னர் அஜ்மலை கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த வாடகை அறையில் அழைத்து சென்று தாக்கியுள்ளனர். அஜ்மலுக்கு மார்ச் 22-ஆம் தேதி உடலில் தீக்காயம் ஏற்பட்ட பிறகும் கல்லூரி நிர்வாகிகள் பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. ஹாஸ்டலில் உள்ள மாணவர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் மறுநாள்தாம் பெற்றோருக்கு இவ்விபரம் தெரியவந்துள்ளது.
2011 செப்டம்பர் மாதம் அஜ்மல் பெங்களூருக்கு எஞ்சீனியரிங் பயில சென்றுள்ளார். ஏரோநாடிகல் எஞ்சீனியரிங் படிக்க விரும்பிய அஜ்மலுக்கு கல்விக் கடனை வாங்கி படிக்க அனுப்பியுள்ளனர். அவரது தந்தை அபுதாபியில் பணிபுரிந்து வருகிறார்.
thanks to asiananban

ரூ. 1.34 கோடி சம்பளத்தில் அலகாபாத் என்ஜினியரிங் மாணவருக்கு பேஸ்புக்கில் வேலை !!


ரூ. 1.34 கோடி சம்பளத்தில் அலகாபாத் என்ஜினியரிங் மாணவருக்கு பேஸ்புக்கில் வேலை
சமூக இணையதளங்களில் மிகவும் பிரபலமான பேஸ்புக் இணையதளம்,  ரூ. 1.34 கோடி ஆண்டு சம்பளத்திற்கு அலகாபாத் என்ஜினியரிங் மாணவரை பணிக்கு எடுத்திருக்கிறது. இந்திய அளவில் எந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவரும் இந்த அளவு அதிக சம்பளம் பெற்றதில்லை.
 இதுகுறித்து மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (MNNIT) இயக்குனரான பி சக்கரவர்த்தி கூறியதாவது:
 
எங்களது நிறுவனத்தில் பி.டெக். படித்துவரும் மாணவரைத்தான் பேஸ்புக் நிறுவனம் பணிக்கு அழைத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தனது பெயரை வெளியிட வேண்டாம் என அம்மாணவர் கேட்டுக் கொண்டதால் அவரது பெயரை இங்கே சொல்ல முடியவில்லை.
 
மார்ச் 27-ம் தேதி பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து பணி நியமன ஆணை அம்மாணவருக்கு கிடைத்தது. ஆண்டுக்கு 2,62,500 அமெரிக்க டாலர் சம்பளமாக  (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.34 கோடி) வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இப்பணிக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு அக்டோபர் துவங்கியது. மின்னஞ்சல் மூலம் பேஸ்புக் விண்ணப்பம்  அனுப்பி இருந்தது. அதன் பிறகு 9 முறை தொலைபேசியில் இண்டர்வியூ நடத்தப்பட்டது. அனைத்து இண்டர்வியூவிலும் இம்மாணவர் வெற்றி பெற்றதால் வேலையில் வந்து சேருமாறு பேஸ்புக் இணையதளம் அழைப்பு விடுத்தது.
 
கான்பூரில் வசித்து வரும் இம்மாணவர்  தனது இன்ஜினீயரிங் படிப்பு முடிந்ததும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மென்லோ பார்க்கில் பணியாற்ற இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
thanks to asiananban

அதிரை சித்திக் பள்ளியின் சுவர் இடிப்பு நில அபகரிப்பு முயற்சி முறியடிப்பு !


                                                   

                                                              இடிக்கப்பட்ட சுவர் 

                                                         இடித்த பின் கட்டபட்ட சுவர் 
SDPI சகோதர்கள் -இடது பக்கம் அதிராம்பட்டினம் சகோதரர்முஹமத், வலது பக்கம் முத்துப்பேட்டையை சேர்ந்த சகோதரர்.தப்ரே ஆலம்

அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவில் உள்ள வக்பு செய்யப்பட்ட அல்லாஹ்வின் இறையில்லமான சித்திக் பள்ளியின் சுற்றுச்சுவரை 29 /03 /2012 அன்று நள்ளிரவு 12.30  மணிக்கு ஆயுதங்களுடன் வந்த சில மர்ம நபர்கள் சுற்றுச்சுவரை தரைமட்டமாக இடித்து சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றனர் .சம்பவத்தை அறிந்த சித்திக்பள்ளி ஜமாத் நிர்வாகிகள் மற்றும் முஹல்லா வாசிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர் .அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற சித்திக்பள்ளி முஹல்லா வாசிகள் ,தரகர் தெரு ஜமாத்தினர் ,பொதுமக்களின் சிலபேர்கள், மற்றும் அதிராம்பட்டினம் முத்துபேட்டை, மல்லிப்பட்டினம் SDPI -யை சேர்ந்த ஏராளமானோர் சித்திக் பள்ளி ஜமாத்தினரின் அனுமதி பெற்று உடனே சுவர் கட்டுமான பணிகளை மேற்கொண்டு நடு இரவு 1.15௦ முதல் 4 .௦௦ 00 மணிவரை கடும் முயற்சி செய்து சுற்றுச் சுவரை கட்டி எழுப்பி பள்ளிவாசல் நிலம் மீட்கப்பட்டது .உடன் சுவர்கட்டுமான பணியினை பொதுமக்களும் ,ஜமாதினரும் பாராட்டினர் . 

Thursday, March 29, 2012

வீடுகளை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் ரூ.50,000 அபராதம். சட்டதிருத்தம் கொண்டுவர தமிழக அரசு முடிவு !


கொசுவினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், புதிய சட்ட திருத்தம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி வீடுகளை சுத்தமாக வைத்திருக்காவிடில் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். பல்வேறு நோய்களுக்கு மூல காரணம் சுகாதார சீர்கேடுகள் தான்.  மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, யானைக்கால் போன்ற நோய்கள் கொசுக்கள் மூலமே பரவுகின்றன. குப்பைகள், சாக்கடை நீர் போன்றவற்றில் இருந்து தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே
சுத்தத்தை பராமரித்தால் கொசுக்களின் இனப் பெருக்கத்தை தடுத்து அதன் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த முடியும்.

இதற்காக 1939-ல் தமிழக பொதுசுகாதார சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதைய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ராஜன் பரிந்துரையில், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த சட்டத்தை இயற்றியது. அதன்படி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களுக்கு 50 பைசா முதல் 5 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், சுதந்திரத்துக்கு பிறகு அமைந்த அரசாங்கங்கள் இந்த சட்டத்தில் உள்ள ஷரத்துக்களை முறையாக அமல் படுத்தவில்லை. டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் தலைதூக்க தொடங்கியதும், கடந்த 2009-ல் பொது சுகாதார சட்டத்தின் பக்கம் அரசின் கவனம் திரும்பியது.

இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது பற்றி பரிந்துரை செய்ய, கூடுதல் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் இளங்கோ தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆய்வு செய்து, அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை செய்தது. சுகாதார துறை செயலாளர் சுப்புராஜிடம் பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் முக்கிய பரிந்துரை, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்பதாகும்.

அந்த அறிக்கை 3 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. உயிரூட்டல் தற்போது அந்த சட்டத்துக்கு மீண்டும் உயிரூட்டம் கொடுக்க, அ.தி.மு.க. அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சட்டத்தில் இந்த காலத்துக்கு பொருந்தும் வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ள, ஆலோசனை நடத்தப்படுகிறது. சுமார் 73 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் வகையில், வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். சாக்கடை நீரை தேக்கி வைக்க கூடாது. கழிவுப் பொருள்களை கண்ட இடங்களில் கொட்ட கூடாது.

குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை தெருவில் வீசக் கூடாது. அதே போல தொழிற்சாலைகள், மருத்துவ மனைகள் மற்றும் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் போன்றவைகளால் கழிவுகளை பொது இடங்களில் குவிக்க கூடாது. குடிநீர் ஆதாரப்பகுதிகளில் கழிவு நீரை வெளியேற்றக் கூடாது. அனைத்து தரப்பு சுகாதாரத்தை பேண வேண்டும் என்று வலியுறுத்தும் திருத்தங்கள் சட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன. 


வீடுகளை சுத்தமாக பராமரிக்காதவர்களுக்கு அதிக பட்சமாக ரூ.50 ஆயிரமும், தொழிற்சாலைகளுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்க, சட்டத்தில் வழிவகை செய்யப்பட உள்ளது. பொது சுகாதார சட்டத்தை கடுமையாக அமல்படுத்தினால் 80 முதல் 90 சதவிகிதம் சுகாதார சீர்கேட்டை சரி செய்து விடலாம் என்று சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

thanks to asiananban

அமெரிக்காவில் இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் இஸ்ரேலிய தயாரிப்புகளை புறக்கணிப்பு!



நியூயார்க்:அமெரிக்காவில் இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் இஸ்ரேலின் தயாரிப்புகளை புறக்கணிப்பார்கள். ஃபலஸ்தீனின் உரிமைகளை மறுக்கும் நடவடிக்கைகளை நிறுத்த இஸ்ரேல் அரசு மீது அழுத்தம் கொடுக்கவே இந்நடவடிக்கை.

நேற்று முன்தினம் ப்ரூக்ளின் டெக்னிக்கல் ஹைஸ்கூலில் ஒன்று திரண்ட பார்க் ஸ்லோப் கோ-ஆபரேசனில் உறுப்பினர்களான ஆயிரக்கணக்கானோர் இஸ்ரேலிய தயாரிப்புகளை புறக்கணிப்பதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.
மேற்கு கரையிலும், கிழக்கு அல் குத்ஸிலும் மீண்டும் குடியிருப்புகளை கட்டுவோம் என்ற இஸ்ரேலின் அறிவிப்பை கண்டிக்கும் தீர்மானத்தை நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் அங்கீகரித்தது.
thanks to asiananban

வக்ஃப் வாரிய வளர்ச்சிக்கான எந்த திட்டமும் பட்ஜட்டில் இல்லை - பாப்புலர் ஃப்ரண்ட்



பத்திரிக்கை செய்தி
 

தமிழக அரசால் வெளியிடப்பட்ட நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் ஒரு சில நல்ல
திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் (உ.ம்) சி.எஃப்.ஐ பல்புகள், கோதுமை, ஓட்ஸ், இன்சுலின் ஆகியவற்றின் வரி குறைப்பு வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. ஆனால் விவசாயிகளுக்கும், உள்நாட்டு தொழில் துறையினருக்கும், ஏழைகளுக்கும், சிறுபான்மையினருக்கும், ஒட்டுமொத்தமாக ஏமாற்றத்தை அளிக்கக்கூடிய பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

உணவு தாணிய உற்பத்தி இலக்கை 1 லட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் டன்னாக நிர்ணயித்துள்ள அரசு, விளை பொருட்களுக்கு உரிய ஆதாயமான விலையை விவசாயிகள் வளர்ச்சிக்காக எந்த வகையான அறிவிப்பையும் வெளியிடவில்லை. அந்நிய நாட்டு முதலீட்டிற்கு ரூபாய் 20,000 கோடியை இலக்காக நிர்ணயித்துள்ள அரசு, உள்நாட்டு தொழிற்துறையினரின் வளர்ச்சிக்காக எந்த ஒரு இலக்கையோ, அவர்களுக்கு ஊக்மளிக்ககூடிய திட்டத்தையோ அறிவிக்க வில்லை.

விலைவாசியை கட்டுப்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு திட்டமும் இல்லாத போதிலும், சமையல் எண்ணெய் மீது அதிகரிக்கப்பட்ட வரியும், நிலத்தின் மதிப்பு உயர்வும், மேலும் மக்களுக்கு சுமையாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது.

சிறு தொழில் செய்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், சிறு தொழில் உற்பத்தியில் இலக்கை நிர்ணயிப்பது சார்பாகவும் இந்த பட்ஜெட்டில் எந்த வகையான ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

கோயில்களின் வளர்ச்சிக்காக பல நலதிட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள சமயத்தில், வக்ஃப் வாரிய வளர்ச்சிக்காக இந்த அரசு எந்த நலத்திட்டமும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

இராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும்

புது தில்லி: தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள மணல் திட்டை இராமர் பாலம் என்றும் அதனை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு தனது நிலையை வியாழக்கிழமை (மார்ச் 29) தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த விவகாரத்தில் பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யத் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்தால் நீதிமன்றம் தனது விசாரணையைத் தொடரும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சேது சமுத்திர கால்வாய்த் திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.எல். தத்து, அனில் ஆர். தவே ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமி நேரில் ஆஜரானார்.

"சேது திட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அத்திட்டம் செயல்படுத்தப்படும் ஆறாவது வழித்தடத்தில் ராமர் பாலம் இருப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர். அதனால் அந்தப் பகுதியைத் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு மாற்றப்பட்டு விட்டன. கடந்த ஜனவரி மாதம் கூட இது குறித்து மத்திய அரசின் நிலையை உச்ச நீதிமன்றம் கேட்டது. ஆனால், இதுவரை மத்திய அரசு பதில் தெரிவிக்கவில்லை'' என்று சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டார்.

இதையடுத்து பேசிய மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரேன் ராவல், " குறிப்பிட்ட இடத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமானால் அதற்கு மத்திய அமைச்சரவைச் செயலரின் அனுமதியைப் பெற வேண்டும். அதே போல், சேது கால்வாய் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து வரும் பச்செரி குழுவின் அறிக்கையை இறுதி செய்யவும் கால அவகாசம் தேவைப்படுகிறது. அவசர கதியில் ஆய்வுகளை நடத்த இயலாது என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட சுப்பிரமணியன் சுவாமி, "பச்செரி குழு அறிக்கையின் நகலை என்னிடம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கோரினார்.இரு தரப்பு கருத்துகளையும் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

சேது சமுத்திர திட்டம் தொடர்பான ஆய்வை முடிக்கவும் அறிக்கை தயாரிக்கவும் அதிக காலம் ஆகிறது என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. அதனால், பச்செரி குழுவின் அறிக்கையை ஆறு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் நகலை மனுதாரருக்கு (சுப்பிரமணியன் சுவாமி) அளிக்க வேண்டும். ராமர் பாலம் இருப்பதாகக் கூறப்படும் பகுதியை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிய மனு மீது மத்திய அரசு இதுவரை தனது நிலையைத் தெளிவுபடுத்தவில்லை.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலையைக் கேட்டு நீதிமன்றத்தில் கூடுதல் வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும். அரசு பதில் அளிக்கத் தவறினால், அதன் கருத்து கேட்கப்படாமல் விசாரணை நடத்தப்படும்'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை வியாழக்கிழமைக்கு (மார்ச் 29) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செய்தி: தினமணி

"எங்களுக்கு கூடங்குளத்துல இருந்துதான் கரண்ட் வேணும்"

இந்த வருடத்தில் பண முதலைகள் ஏழைகளிடம் இருந்து பணத்தை சுரண்டுவதற்கான‌ மற்றொரு வாய்பு தொடங்க இருக்கிறது. ஐ.பி.எல் என்ற சூதாட்டப் போட்டியே அது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் அன்றாட சோற்றுக்கே வழியில்லாமல் திண்டாடிக்கொண்டிருக்க ஐ.பி.எல் போட்டி மிக அவசியமான ஒன்றுதான். இப்போட்டிக்காக வீரர்கள் ஏழம் விடப்படுவதும், விளம்பரம் என  பல்வேறு தரப்புகளில் பணம் புகுந்து விளையாட இருக்கிறது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

இவர்கள் எக்கேடும் கெட்டுப்போகிறார்கள் என்று இருந்துவிட முடியாது. மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி மக்கள் விரோத ஆட்சியே நடைபெற்று வருகிறது என்பதை மக்களுக்கு விழங்க வைக்கவே இத்தகைய பதிவுகள்.


தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் தினமும் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒரு முறையேனும் 8 மணி நேரமும் துண்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல பகுதிகளில் தினமும் 8 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பயங்கர மின்சார தட்டுப்பாடு நிலவி வருகிறது எனவும், கூடங்குளத்தில் அணு உலை திரக்கப்பட்டால் தான் இத்தகைய மின்சார தட்டுப்பாட்டை போக்க இயலும் என்ற ரீதியில் தமிழக அரசு மக்களை நம்ப வைக்க முயற்ச்சி செய்து வருகிறது.


ஆனால் தற்போது துவங்க இருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 800 கிலோவாட் மின்சாரத்தை உபயோகபடுத்தி
இரவு பகல் ஆட்டமாக ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. மொத்தம் 76 போட்டிகள், குறைந்த பட்சம் ஒரு போட்டி 4 மணி நேரம் நடக்கும்.


சென்னையில் மட்டும் 10 போட்டிகள் நடக்கிறது. பார்த்து கூத்தடிக்க
நுழைவு கட்டணம் 500 முதல் 50000 ரூபாய்க்கு மேல் வரை வசூலிக்கப்படுகிறது.
நாடு கடும் மின்சக்தி தட்டுபாட்டில் இருக்கும் போது கூட எரிசக்தி சேமிப்பு பற்றிய அக்கறை இல்லாத அரசியல்வாதிகளுக்கு 
எவன் அழிந்தாலும் கவலை இல்லை மின்சாரம் மட்டும் கூடங்குளத்தில் இருந்துதான் வேண்டும்என்ற ரீதியிலேயே அரசுகள் செயல்பட்டு வருவதை மக்கள் உணர்ந்து கொண்டு இத்தகைய அரசியல்வாதிகளின் நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாப்புலர் ஃப்ரண்டின் சமூம மேம்பாடு பணிகள் - மார்ச் மாத ரிப்போர்ட்



சென்னை:

1. சென்னையில் எம்.டி. படிப்பிற்காக ஒரு மாணவனுக்கு ரூபாய் 40,000 கடனாக வழங்கப்பட்டது.

2. நான்காம் வகுப்பு படிக்கும் அல்லாஹ் பக்ஷ் என்ற மாணவனுக்கு ரூபாய்  3460/- வழங்கப்பட்டது. மற்றொரு மாணவனுக்கு ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

3. இராயபுரத்தில் கேன்சர் சிகிசைக்காக ஒரு நபருக்கு ரூபாய் 10,000/- வழங்கப்பட்டது. 

4. உனைஸ் ரஹ்மான் என்ற 13 மாத குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்காக ரூபாய் 15,000 வழங்கப்பட்டது.

5. டயாலிஸிஸ் செய்வதற்காக ஒருவருக்கு ரூபாய் 1300/- உதவித்தொகை வழங்கப்பட்டது. 

6. வியாபாரம் செய்ய ஒருவருக்கு ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.

7. சென்னை துறைமுகம் தொகுதியிலிருந்து ஏழை பெண்ணின் திருமணத்திற்காக‌ ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

இராமநாதபுரம்:

1. இராமநாதபுரத்தில் அப்பென்டிக்ஸ் சிகிச்சை செய்வதற்கு உதவியாக ஹாலித் என்பவருக்கு ரூபாய் 10,600/- வழங்கப்பட்டது.

2. இளையான்குடியில் திருமண உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது.

கோவை:

1. கோவையில் சுண்ணாம்பு கால்வாயில் கூலி வேலை செய்துவரும்  எஸ். அபுதாஹிர் என்பவரின் இரண்டரை வயது மகன் முஹம்மது சவ்ஹானுக்கு பிறவிலேயே கேட்கும் திற‌னும், பேசும் திறனும் இல்லை. அந்த குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 10200/- கொடுக்கப்பட்டது. (அறுவை சிகிச்சைக்கு சுமார் 6 லட்ச ரூபாய் செலவாகும். மேற்கொண்டு உதவி வழங்க விரும்புவோர் தொடர்பு தொடர்புகொள்ளலாம்.)

2. மருத்துவ உதவியாக 4 நபர்களுக்கு மொத்தம் 5800/- வழங்கப்பட்டுள்ளது. 

3. கோவை புதூரில் திருமண உதவியாக ரூபாய் 8000/- மதிப்புள்ள‌ உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

4. சாய்பாபா காலணியில் ரூபாய் 5000/- திருமண உதவி செய்யப்பட்டது. 

5. ஷாஜஹான் என்பவருக்கு புத்தக கடை வைக்க கடனாக ரூபாய் 30,000 வழங்கப்பட்டது. 

6. அல் அமீன் என்பவருக்கு ஆட்டோ வாங்க ரூபாய் 20,000/-  கடனுதவி செய்யப்பட்டது. 

7. கல்வி உதவித் தொகையாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.

நெல்லை:

1. செங்கோட்டையில் திருமண உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது.

2. தென்காசியில் திருமண உதவியாக ரூபாய் 1000/- வழங்கப்பட்டது.

மதுரை:

1. மதுரையில் எம்.எஸ்சி படிப்பிற்காக  ஒரு சகோதரிக்கு ரூபாய் 8000/- உதவித்தொகை வழங்கப்பட்டது. 

2. மருத்துவ உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது.

திருச்சி:

1. திருச்சி மாவட்டம் புத்தாநத்த்தில் மிகவும் வறுமை நிலையில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு பொருளாதார உதவியாக ரூபாய் 14000/- வழங்கப்பட்டது. 

2. சிறுகனூர் கிராமத்தில் கல்வி உதவித்தொகை ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

1. நாகையில் முஹம்மது நாகூர் என்பவருக்கு கல்வி உதவியாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.

2. மருத்துவ உதவியாக காதர் என்பவருக்கு ரூபாய் 4000/- வழங்கப்பட்டது.

தூத்துக்குடி:

1. தூத்துக்குடி சிவகளையில் அஸ்கர் என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1500/- வழங்கப்பட்டது.

திண்டுக்கல்:

1. பழனி பெரியகுளத்தை சேர்ந்த ஹஸன் முஹம்மது என்பவருக்கு திருமண உதவித் தொகையாக ரூபாய் 5662/- வசூல் செய்து கொடுக்கப்பட்டது.

2. கீரணூரில் ஒரு சகோதரியின் திருமணத்திற்கு ரூபாய் 13600/- வழங்கப்பட்டது. 

3. ஆதரவற்ற பெண் ஒருவருக்கு மாதமாதம் ரூபாய் 150/- வழங்கப்பட்டு வருகிறது.

4. திண்டுக்கலில் தையல் பயிற்சி நிலையம் துவங்குவதற்கு முதல் கட்டமாக ரூபாய் 3000/- வசூல் செய்யப்பட்டது.


பல்வேறு சிகிச்சைக்காக பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் மார்ச் மாதத்தில் மட்டும் 65 யூனிட் இரத்த தானம் செய்துள்ளார்கள்.

thanks to pfi