Friday, March 23, 2012

யூத பயங்கரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானம்



புதுடெல்லி: யூத பயங்கரவாத சக்திகள் நமது நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட்டு அமைதியை சீர்குழைத்து வரவதோடு நாட்டில் பல தீவிரவாத தாக்குதல்களுக்கும் காரணமாய் விளங்கிவருகிறது. யூத பயங்கரவாதத்தை எதிர்த்து நாடு முழுவதும் வீரியத்துடன் பிரச்சாரம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டம் தீர்மானித்துள்ளது.

தேசிய தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய அளவில் நடைபெறவிருக்கும் இப்பிரச்சாரத்தின் அங்கமாக மத்திய அரசு இஸ்ரேலுடனான தனது உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பாராளுமன்றத்தை நோக்கி பேரணியை நடத்த இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத நாடாக திகழ்ந்து வரும் இஸ்ரேல் ரவுடி நாடாக திகழ்ந்து வரும் அமெரிக்காவுடன் கைகோர்த்துக்கொண்டு இந்தியா போன்று இறையாண்மையுடன் செயல்பட்டுவரும் நாடுகளை ஈரான், ஃபலஸ்தீன் போன்ற நாடுகளை எதிர்ப்பதற்காக நிர்பந்தித்து வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்திற்கும், தீவிரவாத எதிர்ப்பு போராட்டத்திற்கும் இஸ்ரேலின் ஏஜென்ஸியை நாடி இருப்பது வியக்கத்தக்கதாக இருக்கிறது. காரணம் உலக பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக செயல்படுவதே இஸ்ரேல்தான். இஸ்ரேலுடனான உறவை இந்தியா அதிகப்படுத்தினால் அதனை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு பயங்கரவாத செயல்களில் இந்துத்துவா சக்திகள் மேலும் வீரியத்துடன் செயலாற்றும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இஸ்ரேலால் பாதிக்கப்பட்ட ஃபலஸ்தீன மக்களுக்காக கண்ணீர் சிந்திவிட்டு மறுகணமே இஸ்ரேலுடனான உறவை ஏற்படுத்துவது நமது தேசத்தின் மரபுகளுக்கு எதிரான ஒன்று என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கருதுகிறது. பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபனிந்து ஃபலஸ்தீனத்திற்கு எதிராகவும், ஈரானிற்கு எதிராகவும் செயல்பட்டுவிடக்கூடாது என வலியுறுத்துகின்றனர்.

பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் அனைவரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் பள்ளி செல்வோம் பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள். பள்ளிக்குழந்தைகளுக்கான உபகரண பொருட்கள் மொத்தம் 1 லட்சம் குழந்தைகளுக்கு  இவ்வருடம் வட இந்திய மாநிலங்களில் விநியோகிக்கப்படும். இந்த பிரச்சாரத்தின் போது கல்வி விழிப்புணர்வு, கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்றவையும் மேற்கொள்ளப்படும்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டம் நிறைவேற்றிய மற்றொரு தீர்மானமாவது, தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் தொடங்குவது பற்றி தனது கருத்தினை வெளியிட்டுள்ளது. தீவிரவாதம் என்பது நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தாலும், ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் தெரிவித்தது போன்று இது கூட்டணைப்பிற்கு எதிரானதாக அமைந்துவிடும். எனவே மத்திய அரசு தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் தொடங்குவது தொடர்பான தன்னுடைய தீர்மானத்தை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது. தேர்தல் நேரங்களில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தேர்தல்களில் தங்களுடைய வாக்குகளை செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் அறிக்கைகள் மற்றும் தீர்மானங்களை வாசித்தார். துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா, உறுப்பினர்கள் மெளலானா உஸ்மான் பேக், பேராசிரியர் கோயா, யா முஹைதீன், வழக்கறிஞர் கே.பி. ஷரீஃப், ஹாமித் முஹம்மது, ஓ.எம்.ஏ. ஸலாம், முஹம்மது ரோஷன் மற்றும் மாநில தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment