Wednesday, March 21, 2012

பிரான்ஸில் யூத பாடசாலை மீது தாக்குதல் !!

சூத்திரதாரியை எங்கிருந்தாலும் கண்டுபிடிப்போம் - சர்கோசி !!
பிரான்சின் தென் பகுதி நகரில், மர்ம நபர் ஒருவர் யூத பள்ளிக்கூடம் ஒன்றில் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில், மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலியாயினர். ஒருவர் காயமடைந்தார்.
பிரான்சின் தென் பகுதியில் உள்ள டுலுஸ் நகரின் வடகிழக்கில் உள்ளது, ஓஜார் ஹட்டோரா என்ற யூத பள்ளிக்கூடம். இதில், காலை உள்ளூர் நேரப்படி 8 மணியளவில், பெற்றோர் தங்கள் குழந்தைகளை விடச் சென்றிருந்தனர். அப்போது அங்கு கறுப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், அதிலிருந்து இறங்கி, தன் கையில் இருந்த துப்பாக்கியால் கண்மூடித் தனமாக சுட்டார்.துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்ட அங்கிருந்த குழந்தைகள், அலறியடித்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்குள் சென்றனர். இதில், பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த ஓர் ஆசிரியை மற்றும் மூன்று குழந்தைகள், பரிதாபமாக பலியாயினர். 17 வயது இளைஞர் ஒருவர் காயமடைந்தார்.

துப்பாக்கிச்சூட்டை நடத்திய மர்ம நபர், தான் வந்த அதே இரு சக்கர வாகனத்தில் ஏறி, கண்மூடித் திறப்பதற்குள் மறைந்து விட்டார்.சம்பவ இடத்திற்கு நேரில் வந்த பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, "இது தேசிய சோக நிகழ்வு. குற்றத்தைச் செய்தவர் எங்கிருந்தாலும் பிடிக்கப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்படுவார்' என உறுதியளித்துள்ளார்.பிரான்ஸ் பிரதமர் பிரான்காயிஸ் பில்லான், நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகள் மற்றும் மத தலங்களில், விரைவில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.டுலுஸ் நகரில், இம்மாதம் நடந்த மூன்றாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது. கடந்த 11 மற்றும் 15ம் தேதிகளில் நடந்த மர்ம துப்பாக்கிச்சூடுகளில், மூன்று ராணுவ வீரர்கள் பலியாயினர்.thanks to qahtaninfo blogger

0 comments:

Post a Comment