புதுடெல்லி:டெல்லி இஸ்ரேலிய தூதரக கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மி மீது போலீஸ் போலியான ஆதாரங்களை சுமத்தி வருகிறது.
கஸ்மிக்கு எதிராக முக்கிய ஆதாரமாக போலீஸ் காட்டும் ஸ்கூட்டர், அவருடைய வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை இஸ்ரேலிய தூதரக கார் குண்டுவெடிப்பில் உபயோகிக்கப்பட்டதாக போலீஸ் கூறுகிறது.
ஆனால், இந்த ஸ்கூட்டர் தனது மாமாவுக்கு சொந்தமானது என்றும், இது கடந்த 2 வருடங்களாக வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது என்றும் அதற்கான ஆவணங்கள் தங்கள் வசம் உள்ளதாகவும் கஸ்மியின் மகன் ஷவ்ஸாப் கூறுகிறார்.
சிறுநீரக நோயாளியான மீரட்டைச் சார்ந்த தனது மாமா, இரண்டு வருடத்திற்கு முன்பு ஆல் இந்தியா இன்ஸ்ட்யூட் ஆஃப் மெடிக்கல் சயன்ஸில் சிகிட்சைக்காக டெல்லியில் வசித்த வேளையில் பயணச் செலவை குறைப்பதற்காக ஸ்கூட்டரை வாங்கினார். சில மாதங்களுக்கு முன்பு அவர் ஸ்கூட்டரை இங்கே நிறுத்திவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு எவரும் அதனை தொடவில்லை இவ்வாறு ஷவ்ஸாப் கஸ்மி கூறுகிறார்.
ஆனால், இந்த ஸ்கூட்டரை ஈரானைச் சார்ந்தவருக்கு குண்டுவெடிப்பை நிகழ்த்த கஸ்மி உதவியதற்கான முக்கிய ஆதாரம் என்று டெல்லி போலீஸ் கூறுகிறது. இந்தியாவில் தப்பித்துச் சென்ற குண்டுவைத்த ஈரான் நாட்டவர் இந்த ஸ்கூட்டரை உபயோகித்தார் என்று போலீஸ் கூறுகிறது.
பஹார் கஞ்சில் உள்ள ஹோட்டலில் குண்டுவெடிப்பிற்கு பிறகு ஈரானைச் சார்ந்த நபர் தங்கியிருந்தார் என்பதை கண்டுபிடித்ததாகவும் போலீஸ் கூறுகிறது.
ஹரியானாவில் பதிவுச் செய்யப்பட்டுள்ள ஸ்கூட்டியை கஸ்மியின் பி.கே.தத் காலனியில் உள்ள வீட்டில் இருந்து போலீஸ் கைப்பற்றியது. கஸ்மிக்கு எதிராக ஆதாரம் இருப்பதாகவும், குண்டுவெடிப்பிற்கு உதவ ஈரானியர்களிடமிருந்து பணம் பெற்றதாகவும் போலீஸ் குற்றம் சாட்டுகிறது. கஸ்மி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் போலீஸ் கூறுகிறது.
source:
thoothuonline
0 comments:
Post a Comment