Monday, March 12, 2012

அடையாளம் தெரியாத உடல்கள்: கஷ்மீர் அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!


ஸ்ரீநகர்:கஷ்மீர் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட இறந்த உடல்களை டி.என்.ஏ(மரபணு) சோதனை செய்யவேண்டும் என்று கோரும் மனுவின் மீதான விசாரணையில் ஜம்மு-கஷ்மீர் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள து .
புகாரை கோப்பில் ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹஸ்னைன் மஸூதி இரண்டு வாரத்திற்குள் அரசு பதில் தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. 10 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன நபரின் மகன் ஸஹுர் அஹ்மத் மிர் என்பவர் இந்த புகார் மனுவை அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை கமிஷனின் அறிக்கையை ஆவணமாக ஆஜர்படுத்த மனுதாரரிடம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வடக்கு கஷ்மீரில் பந்திபோரா, பாரமுல்லா, குப்வாரா ஆகிய மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளில் ஆயிரக்கணக்காண இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. போலீஸ் கைதுச்செய்த பிறகு காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய மாநில மனித உரிமை கமிஷனின் புலனாய்வு பிரிவு 2000 அடையாளம் தெரியாத கல்லறைகள் இம்மாவட்டங்களில் இருப்பதாக ஒப்புக்கொண்டது. இந்த உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ பரிசோதனை நடத்தவேண்டும் என்று மனித உரிமை கமிஷனின் புலனாய்வு குழு சிபாரிசு செய்தது.
இக்காரியத்தை உட்படுத்திய அறிக்கையை கமிஷன் மாநில அரசிடம் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியது. காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கவும், நிரபராதிகளை கொலைச் செய்தவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவரவும் கமிஷன் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
thanks to asiananban

0 comments:

Post a Comment