அமெரிக்க புலனாய்வுத்துறை எச்சரிக்கை !!
நீர் நிலைகளை முறையாக பாதுகாக்கவில்லையென்றால் எதிர்காலத்தில் நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் என்று அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் பரிந்துறையின் பேரில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி தெரிவித்துள்ளது. அறிக்கையில் மேலும் குறிப்பிட்டதாவது:
தெற்கு ஆசியாவில் ஓடும் பிரம்மபுத்திரா நதி, மத்திய கிழக்கு நாடுகளில் ஓடும் டைக்ரஸ் மற்றும் யுபரேட்டஸ் நதிகளை பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அணைகள், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் உள்ளன. அதனால் போதுமான பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும்.
பல்வேறு நாடுகளில் ஓடும் நதியின் நீரைப் பங்கிடுவதில் நாடுகளுக்குள் பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இது அடுத்த உலகப் போர் ஏற்பட வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
thanks to qahtaninfo
0 comments:
Post a Comment