Tuesday, March 20, 2012

சிறுபான்மை நலத் திட்டங்கள்: அடிமட்டத்தில் இருந்து அமையவேண்டும் – முஸ்லிம் அமைப்புகள்!



புதுடெல்லி:சிறுபான்மை அமைச்சகத்திற்கான ஒதுக்கீட்டுத் தொகையை பட்ஜெட்டில் அதிகரித்து இருப்பது குறித்து வரவேற்றுள்ள முஸ்லிம் அமைப்புகள் திட்டங்களை அமுல்படுத்துவதை அடிமட்டத்தில் உறுதிச்செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த ஆண்டு சிறுபான்மை அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட ரூ.385 கோடி அதிகரித்து 3135 கோடி ரூபாய் இவ்வாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை அமுல்படுத்த இது உதவும் என்று கருதுவதாக ஜம்மியத் உலமாயே ஹிந்த் தலைவர் மவ்லானா அர்ஷ்த் மதனி கூறியுள்ளார். கல்வி, தொழில், பாதுகாப்பு துறைகளில் முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. இதற்கு தீர்வு காண அரசு உதவும் என்று கருதுவதாக அவர் தெரிவித்தார்.
சிறுபான்மை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தினாலும் அடிப்படை வசதிகளின் வீழ்ச்சி தொடர்வதாக ஆல் இந்தியா உலமா மஸாஹிப் போர்டு செய்தித் தொடர்பாளர் ஸய்யித் பாபர் அஷ்ரஃப் கூறினார்.

0 comments:

Post a Comment