1946ம் ஆண்டு சுதந்திரத்திற்கு முன்பாக நடைபெற்ற அரசியல் நிர்ணய சபை தேர்தலில் பம்பாயில் இருந்த பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களை காங்கிரஸ் கட்சி கைவிடாது, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் ஆவதற்கு நிச்சயம் வாய்ப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் உறுப்பினர் தேர்விற்கான பட்டியலில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயர் (அன்றைக்கு இருந்த சனாதன சக்திகளின் சூழ்ச்சியால்) காங்கிரஸ் பட்டியலில் இடம் பெறவில்லை. அவரை காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை என்ற செய்தி காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இருந்து தான் தெரியவந்தது.
இந்த செய்தி அறிந்த முஸ்லிம் லீக் தலைவர்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் அறிவும் ஆற்றலும் நாட்டுக்கு பயன்பட வேண்டும் என்ற நன்னோக்கில் வங்காளத்திற்கு அழைத்து முஸ்லிம் லீக்கிற்கான ஒதுக்கீட்டில் முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக அறிவித்து, வெற்றிப் பெறச் செய்து அண்ணல் அம்பேத்கர் அவர்களை அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் ஆக்கினர் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத வரலாறு.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை உள்ளிட்ட சமூக மக்களுக்காக போராடிய அண்ணலை கொண்டாடும் நாம் நெஞ்சத்தில் பதிந்து வைக்க வேண்டிய மிக முக்கியமான வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு ஆகும் அது.
-ஏப்ரல் 14, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம்.
0 comments:
Post a Comment