Monday, April 12, 2021

உலக மருத்துவத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த சென்னை மருத்துவம்!

 பல உலக நாடுகளின் மருத்துவத்தால் தீர்க்க முடியாத டின்னிட்டஸ் எனும் காது சார்ந்த பிரச்சனைக்குச் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை தீர்வளித்துள்ளது.

உலக அளவில் 15% முதல் 20% சதவீத மக்கள் மட்டுமே டின்னிடஸ் எனும் காது சார்ந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயின் காரணமாகப் பாதிக்கப்பட்டோரின் இரு காதுகளிலும் இரைச்சல் (ringing sound in ear) சத்தம் எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு இரவு நேரங்களில் தூக்கமின்மை ஏற்படுகிறது. மேலும் இந்த குறிப்பிட்ட பிரச்சனைக்கு இதுவரை உலக நாடுகளால் தீர்வு காணமுடியவில்லை. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்று இந்த நோயால் பாதிப்படைந்த 26 வயது இளைஞர் ஒருவரை மைக்ரோவாஸ்குலர் டிகம்பரஷ்ஷன் எனும் அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தியுள்ளது.

2 வருட காலமாக டின்னிடஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரின் இரு காதுகளிலும் ரிங்கிங் ஒலியானது கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. இதனைச் சரிசெய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் சரியாகாத நிலையில் தற்போது மைக்ரோவாஸ்குலர் டிகம்பரஷ்ஷன் அறுவை சிகிச்சை செய்ததின் மூலம் சரியாகியுள்ளது. மேலும் உலக நாடுகளே டென்னிட்டஸ் நோய்க்கு இதுவரை தீர்வு காணாத நிலையில் சென்னையைச் சேர்ந்த எம்ஜிஎம் மருத்துவமனை தற்போது தீர்வுகண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment