Saturday, April 10, 2021

அதிராம்பட்டினத்தில் உணவு பொருட்களின் விலையே தீர்மானிப்பது வணிகர் சங்கமா? வியாபாரிகளா ?

     நமது ஊரில் வாழும் மக்களின் 80% பேர் வெளிநாடு கம்பெனியில் வேலை பார்த்து பணம் சம்பாத்தியம் செய்து வருகிறார்கள். ஆனால் கடந்தவருடம் முதல் கொரோன காரணமாக சம்பளம் சரியாக பல நபர்களுக்கு கிடைக்கவில்லை. கடந்த வருடம் முதல் கொரோனவை காரணம் காட்டி தற்போது வரை ஒரு சில வியாபாரிகள் அன்றாட வீட்டுக்கு தேவையான உணவு பொருட்களின் விலையை அதிக லாபம் பெரும் நோக்கத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் நமது அருகாமையில் உள்ள பட்டுக்கோட்டை, மதுக்கூர், முத்துப்பேட்டை ஆகிய ஊர்களில்   விற்கும் விலையைவிட நமதூரில் பல மடங்கு விற்பனை ஏன் ?  இப்படிபட்ட வியாபாரிகளை தயவு கூர்ந்து வணிக சங்கமும் மற்றும் நுகர்வோர் நீதிமன்றமும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிரை மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.


குறிப்பு : இது அதிரை மக்களின் நலன் கருதி மட்டுமே தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. 



0 comments:

Post a Comment