Monday, February 28, 2011

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி குடுக்கப்படுமா?

உலகிலுள்ள எந்த நாடும் கடல் எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை. பாகிஸ்தான் கூட எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதே வழக்கமாக இருந்திருக்கிறது. காரணம், சர்வதேசகடல் சட்டம் சரத்து 73, மீனவர்களை கடலில் சுடுவதை தடை செய்திருக்கிறது. இச்சட்டத்தில் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் கையொப்பம் இட்டுள்ளன. இதில், இந்தியாவும், இலங்கையும் கூட அடக்கம்.

ஆனால், இச்சட்டத்தை இலங்கை அரசு இதுவரை மதித்து நடந்ததில்லை. இந்திய அரசும் இதை தட்டிக் கேட்டதில்லை. பதிலாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை குருவிகள் போல சுட்டுத் தள்ளுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. இதுவரை 500 க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் இப்படி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மீது 600க்கும் மேலான முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டு விசாரணையின்றி கடலோர மாவட்டங்களில் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் கொலை, கொலை முயற்சி மற்றும் ஆயுத சட்டப்படியான கடுமையான குற்றங்கள். இக்குற்றவாளிகளை இந்திய நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த இந்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 12.01.2011 மற்றும் 22.01.2011 ஆகிய தேதிகளில் வீரபாண்டியன், ஜெயக்குமார் ஆகிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொடூரமாக சுடப்பட்டு, கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளனர். இது சர்வதேச கடல்சட்டங்களை மீறிய செயலாகும். 2008ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி வெளியிடப்பட்ட இந்திய – இலங்கை கூட்டறிக்கைப்படி இந்திய மீன் பிடி படகுகளை சுடக்கூடாதென ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசு இதையும் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்திய அரசியல் சட்டம் சரத்து 19 (1) ( g) ன் படி மீன்பிடி உரிமை, தமிழக மீனவர்களின் அடிப்படை உரிமையாகும். அதே போல் இந்திய அரசியல் சட்டம் சரத்து 21ன்படி மீனவர்களூக்கு வாழ்வுரிமையும் அடிப்படை உரிமையாகும். தனது குடிமக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டியது அரசியல் சட்டப்படி அரசின் கடமையாகும். இப்படி தனது குடிமக்களின் அடிப்படை உரிமைகளான தொழில் உரிமை, வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய இந்திய அரசு அக்கடமையிலிருந்து தவறியிருக்கிறது.

அத்துடன் இலங்கையில் தனது மேலாண்மையை நிலைநாட்டுவதற்க்காக தனது சொந்த நாட்டு மக்களின் நலன்களைப் பலியிட்டு வெறுமனே ராஜதந்திர நாடகங்களை நடத்தி வருகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் பணக்கார மாணவர்கள் சிலர் பாதிக்கப்பட்ட போதும், மும்பையில் தாஜ் ஓட்டல் தாக்கப் பட்ட போதும், சிலிர்த்து எழுந்தது. தேசபக்தி நாடகமாடி மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பியது. குஜராத் தொழிலதிபர்களின் கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சோமாலியா கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு ஒரு உயிர் கூட சேதமடையாத நிலையில் இந்திய கடற்படையை விரைந்து அனுப்பி நடவடிக்கை எடுத்தது.

இப்படி ஆளும் வர்க்க நலனுக்காக மட்டுமே செயல்படும் இந்திய அரசு, தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. இதனால் தமிழக மீனவர்கள் இந்திய அரசு தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள். ஆகவே மீனவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி லைசென்சும், இலவசமாகத் துப்பாக்கியும் இந்திய அரசு வழங்க வேண்டும். இத் தற்காப்புரிமை இந்திய தண்டணைச் சட்டம் பிரிவுகள் 96 – 100; வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதி 3 ஆகியவற்றின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை கடற்படை செய்துள்ள குற்றங்கள், அது தொடர்பான வழக்குகள், வழக்குகள் மீதான இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து ஒரு நீதிபதியை நியமித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ் நாடு அமைப்பின் மதுரைக் கிளை துணைச் செயலரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சே.வாஞ்சி நாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

நலத்திட்டங்களை அறிவித்தார் சவுதி மன்னர்.


சவுதி மன்னர் அப்துல்லா
சவுதி மன்னர் அப்துல்லாசவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா மூன்று மாத கால மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் நாடு திரும்பியுள்ளார்.
அவரின் வருகையை ஒட்டி வீதிகள் எங்கும் தேசிய கொடி பறந்து கொண்டிருந்தன. அரச ஊடகம் உற்சாக மிகுதியில் காணப்பட்டது.
மத்திய கிழக்கு பகுதியில் உள்ள நாடுகள் சிலவற்றில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் உலுக்கி கொண்டிருக்கும் நேரத்தில் சவுதி மன்னர் நாடு திரும்பியுள்ளார்.
சவுதி அரேபியாவின் நீண்ட நாள் கூட்டாளியான எகிப்தின் ஹோஸ்னி முபாராக் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டார்.
பஹ்ரைன் மற்றும் யெமனில் நடைபெறும் வீதி போராட்டங்கள் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சிலர், அரசியல் சுதந்திரம் இல்லாத சவுதி அரேபியாவிலும் பிரச்சனை வெடிக்கலாம் என எண்ணுகின்றனர். சவுதி அரேபியாவை பல பல காலமாக ஆண்டு வருபவர்கள் அங்கு அரசியல் சுதந்திரத்தை அனுமதித்ததே கிடையாது.
இதையெல்லாம் உணர்ந்து தான் என்னவோ, 87 வயதான சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா யாரும் எதிர்பாராத பல அதிரடி நல திட்டங்களை தற்போது அறிவித்துள்ளார். இவர் அறிவித்த திட்டங்களின் மதிப்பு கிட்டதட்ட 3700 கோடி அமெரிக்க டாலர்கள்.
பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு, வேலை வாய்ப்பிலாமல் உதவுவதற்கு மற்றும் குடும்பங்களுக்கு நியாய விலையில் குடியிருப்பு போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் உதவி மற்றும் கடன் தள்ளுபடி போன்ற சலுகைகள் கூட மன்னரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மன்னரால் அறிவிக்கப்பட்ட நல திட்டங்களில் அரசியல் சீர்திருத்தம் குறித்து எவ்விதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
உலகத்தில் மிக பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான சவுதி அரேபியா மன்னராட்சி முறையிலேயே ஆளப்பட்டு வந்துள்ளது. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றமோ, அரசியல் கட்சிகளோ கிடையாது.
எதிர்வாதங்களை வைப்பவர்களை சவுதி அரேபியாவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அரசியல் முறை முற்றாக மாற்றப்பட வேண்டும் என கூறி வருகின்றனர்.
வேலைவாய்ப்பின்மை மற்றும் வீடு பற்றாக்குறை ஆகியவை சவுதி அரேபியாவில் மிகப்பெரிய பிரச்சனை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சவுதி அரேபியாவின் பெரும்பாலான நிலப்பகுதி மன்னர் குடும்பத்தின் சொத்தாக இருப்பதால், இந்த நிலத்தை விற்க போகிறார்களா அல்லது தானமாக கொடுக்க போகிறார்களா என்பது தெரியவில்லை

குவைத் அரசின் சிறப்பு கருணைக்கால அறிவிப்பு.



TMCA NEWSLETTER

குவைத் அரசின் சிறப்பு கருணைக்கால அறிவிப்பு

அன்புடையீர்,

எதிர்வரும் மார்ச் மாத முதல் தேதி முதல் ஜூன் மாத கடைசி வரையிலான நான்கு மாத காலங்களுக்குள், இகாமா இல்லாது சட்டத்திற்கு புறம்பாக வசிப்பவர்கள், இகாமாவை முறைப்படுத்திக் கொள்ளவும் அல்லது எவ்வித அபராதத் தொகையுமின்றி குவைத்தை விட்டு வெளியேறவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறாக செல்பவர்கள் மீண்டும் குவைத் திரும்புவதற்கு ஏற்ப, அவர்களது பெயர்கள் கம்ப்யூட்டரில் பதிவாகாது எனவும் மற்றும் அவர்களது கைரேகைப் பதிவும் செய்யப்பட மாட்டாது எனவும் குவைத் நாட்டின் 'வெளிநாட்டவர்கள் முறைப்படுத்தும' தலைமைக்குழு-வின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது என தொழிலாளர் இலாகாவின் செயலர் மன்சூர் அல்-மன்சூர் அறிவித்திருப்பதாக அரபி செய்தித் தாள் ஒன்றில் இது குறித்த செய்தியை மேற்கோள் காட்டி இந்தியத் தூதரக இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குவைத் வாழ் தமிழக அனைத்து சகோதர, சகோதரிகளும் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி இந்தியன் என்ற நற்பெயரை நிலைநிறுத்தும் பொருட்டு விரைந்து முறைப்படுத்திக் கொள்ளுமாறு பேரவை சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.



நிர்வாகம்.
தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை குவைத்.
Helplines 97649800 / 94420919

For more information : http://www.tmcaonline.com

2011-12-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

டெல்லி,பிப்.28:இன்று 2011-12-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
2011 ல் மொத்த பொருளாதார வளர்ச்சி8.6 சதமாக இருக்கும்.

2011- 2012 ல் பொருளாதார வளர்ச்சி 9.1 சதமாக இருக்கும்

கஷ்மீரின் வளர்ச்சிக்கு ரூ.8 ஆயிரம் கோடி

மெளலானா ஆசாத் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.200 கோடி

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக கேரள மாநிலம் மலப்புறம் மற்றும் மே.வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தில் கேம்பஸ் அமைக்க ரூ.50 கோடி வீதம் ஒதுக்கீடு.

உள்கட்டமைப்பு கடனுக்கு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதம் மானியம்

விவசாயிகளுக்கு வழங்கிவரும் கடனை அதிகரிக்க முடிவு

நாடு முழுவதும் புதிதாக 15 உணவுப் பூங்கா திறக்க முடிவு

மண்ணெண்ணெய், உரத்திற்கு நேரடி வரி மானியம்

வேளாண்துறையில் தனியார் முதலீடு அதிகரிப்பு

வீட்டுக்கடன் 20 லட்சம் முதல் 25 லட்சம் வரை உயர்த்தி வழங்கப்படும்.

பாரத் நிர்மாண் திட்டத்திற்கு 58 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

கல்வி முதலீட்டு தொகை 24 சதம் உயர்த்தி நடப்பாண்டில் 52 ஆயிரத்து 57 கோடி ஒதுக்கீடு.

அங்கன்வாடி:ஊழியர்களுக்கு 1500 லிருந்து 3 ஆயிரமாக ஊதிய உயர்வு

சர்வசிக்ச அபியான் ( அனைவருக்கும் கல்வி ) திட்டத்திற்கு 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை கொண்டுவர 5 அம்ச திட்டம்

கிராமப்புற தொலை தொடர்பு வளர்ச்சிக்கு 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

முதியோர் உதவி பென்சன் திட்டத்தில் வயது (65 ல் இருந்து 60 வயதாக) வரம்பு தளர்வு

உணவுப் பாதுகாப்பு திட்டம் நடப்பாண்டில் நிறைவேற்ற உறுதி

தாக்குதலில் காயத்திற்குள்ளாகும் பாதுகாப்பு படை வீரர்களின் கருணைத் தொகை உயர்வு

நதிகள் சீரமைப்பு செய்ய சிறப்பு திட்டத்திற்கு 200 கோடி ஒதுக்கீடு

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கூடுதல் கடனுதவி.

நக்சல் பாதிப்பு பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்த சிறப்பு ( 25
முதல் 30 கோடி வரை) திட்டம்.

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1.60 லட்சத்தில் இருந்து 1.80 லட்சமாக உயர்வு

80 வயதுக்கு மேல் உள்ள முதியோருக்கு ரூ.500 உதவித்தொகை

அடிப்படை உணவு மற்றும் எரிபொருளுக்கு சுங்கவரி, ‌சேவை வரியில் மாற்றம் இல்லை

மூத்த குடிமக்களுக்கு வரிவிதிப்பில் விதிவிலக்கு

இரும்பு ,சிமெண்ட் உற்பத்தி வரியில் சலுகை

சூரிய மின்சக்தி தயாரிப்புக்கான பலகை இறக்குமதி வரி ரத்து

திரைப்படத்துறையினருக்கு சலுகை

விமான கட்டண சேவை வரி உயர்வு


எகிப்தின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் பிரிட்டன் - முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் கண்டனம்

கெய்ரோ,பிப்.28:எகிப்தில் மக்கள் புரட்சிக்கு பின்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பிரதமர் எகிப்தின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் விதமாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான எஸ்ஸாம் அல் எரியான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: "௦65 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டனின் ஆதிக்கம் எகிப்தில் முடிந்து போய்விட்டது. எகிப்தியர்களுக்கு அவர்களுடைய பிரச்சனையை எப்படி நிர்வகிக்க வேண்டுமென்பது நன்றாகவே தெரியும்." எனத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் எகிப்து சுற்றுப்பயண வேளையில் ராணுவ ஆட்சியாளர்கள் மற்றும் தேர்வுச் செய்யப்பட்ட சில எதிர்கட்சியினரை சந்தித்துப் பேசினார். ஆனால், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத் தலைவர்களை சந்திப்பதை அவர் தவிர்த்தார். மேலும் பிரிட்டன் பிரதமர் காமரூன், எகிப்து உள்பட அரபுலகத்தில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப பிரிட்டன் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

பிரிட்டன் பிரதமர் காமரூனின் மத்தியக்கிழக்கு சுற்றுப்பயணம் பிரிட்டனிலும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அவர் தனது சுற்றுப்பயணத்தின் போது எட்டு ஆயுத தயாரிப்பாளர்களை அழைத்துச் சென்றது வெட்கக்கேடு என அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தி:ப்ரஸ் டிவி


துருக்கி முன்னாள் பிரதமர் நஜ்முத்தீன் எர்பகான் மரணம்

அங்காரா,பிப்.28:துருக்கி முன்னாள் பிரதமர் நஜ்முத்தீன் எர்பகான் மரணமடைந்தார். இஸ்லாமிய இயக்கத்தின் தலைமையிலான துருக்கியின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் எர்பகான் ஆவார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் அங்காராவிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் எர்பகான். 84 வயதான எர்பகான் இதய அதிர்ச்சி மூலம் மரணமடைந்துள்ளார். எர்பகானின் மரணத்திற்கு துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகான் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கையின் மூலம் முன்மாதிரியாக திகழ்ந்த ஒரு மாபெரும் அனுபவசாலியை தேசம் இழந்துவிட்டதாக உருதுகான் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


மலேசியாவில் ஹிந்துத்துவா அமைப்பினர் கைது

கோலாலம்பூர்,பிப்.28:சட்டவிரோதமாக போராட்டம் நடத்திய 109 இந்திய வம்சாவழியைச் சார்ந்த ஹிந்துத்துவா அமைப்பினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் விவாத நூலை உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டி பேரணி நடத்திய தடைச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா அமைப்பான ஹிந்து ரைட்ஸ் ஆக்‌ஷன் ஃபோர்ஸ் உறுப்பினர்கள்தாம் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள்.

நகரத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக இவர்களை கைது செய்துள்ளதாக மாநகர போலீஸ் தலைவர் துல்கிஃப்லு அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்டமைப்பைக் குறித்து விவாதிக்கும் மலேசிய மொழியிலான நாவலை பாடத்திட்டத்திலிருந்து நீக்கவேண்டும் என்பது ஹிந்துத்துவா அமைப்பினரின் கோரிக்கையாகும். ஆனால், திருத்தத்துடன் மட்டுமே இப்புத்தகம் படிப்பதற்காக வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தப் பிறகும் குழப்பம் ஏற்படுத்துவதற்காக இவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இச்சம்பவம் வருத்தத்திற்குரியது எனவும், பேரணி நடத்தாதீர்கள் என வேண்டுகோள் விடுத்தபிறகும் அதனையும் மீறி செயல்பட்ட ஹிந்துத்துவா அமைப்பினர் நாட்டின் சட்டத்தை அவமதித்துள்ளார்கள் என துல்கிஃப்லு தெரிவிக்கிறார். மேலும் நாவலுக்கெதிராக போராடிய இவர்களுக்கு வேறு இந்தியர்களின் ஆதரவு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


லிபியாவிலிருந்து விமானம் மூலம் மீண்ட இந்தியர்கள்-தலைவன்கோட்டை தமிழர்கள் வரவில்லை!

டெல்லி: லிபியாவில் மக்கள் போராட்டம் அதிகரித்துள்ளது. அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடந்து வருகிறது. சாலையெங்கும் உடல்களாக கிடக்கின்றன. அவற்றை புல்டோசர்கள் மூலம் அகற்றி குப்பைகளில் வீசுகிறார்கள் என்று அங்கிருந்து மீண்டு வந்த இந்தியர்கள் கூறியுள்ளனர்.

லிபியாவுக்கு அனுப்பப்பட்ட 2 சிறப்பு ஏர் இந்தியா விமானங்கள் மூலம் முதல் கட்டமாக 528 பேர் வந்து சேர்ந்தனர். இன்னும் பலர் லிபியாவிலேயே இருப்பதாக, மீண்டு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். லிபியாவில் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கையுடன் அங்கேயே இருக்க அவர்கள் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், 88 பேர் அருகில் உள்ள துனிஷாயவுக்கு தப்பிச் சென்று புகலிடம் அடைந்துள்ளனராம்.

லிபியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்க இரண்டு சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்குகிறது. தினசரி 2 விமானங்களை தலைநகர் திரிபோலிக்கு இயக்கிக் கொள்ள லிபியா நாடு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து நேற்று முன்தினம் முதல் இந்த சேவையை தொடங்கியது ஏர் இந்தியா. முதல் 2 விமானங்கள் நேற்று லிபியா சென்று இரண்டு கட்டமாக 528 இந்தியர்களை மீட்டு கொண்டு வந்துள்ளன.

முதல் விமானம் 291 பேருடன் டெல்லிக்கு வந்து சேர்ந்தது. அதேபோல 237 பேருடன் இரண்டாவது விமானம் வந்து சேர்ந்தது.

இரு விமானங்களிலும் இருந்தவர்களில் 36 பேர் தமிழர்கள். மீண்டு வந்த ஈரோட்டைச் சேர்ந்த கவிதா என்பவர் கூறுகையில், அங்கு நாங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தோம். சாப்பாடு, தண்ணீர் சிக்கலாக இருந்தது. 

எங்களது உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் கூட பயத்துடன் இருந்தோம். இன்னும் நிறைய பேர் அங்கேயே உள்ளனர். அமைதி திரும்பும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் என்றார்.

முகம்மது சாலி என்ற என்ஜீனியர் கூறுகையில், லிபியாவில் நிலைமை மோசமடைந்துள்ளது. மக்கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் உயிரைக் கையில் பிடித்தபடி வீடுகளுக்குள் அடைந்து கிடந்தோம்.

தண்ணீர், உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவுகிறது. மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர். போலீஸாரை எங்குமே காண முடியவில்லை. காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது.

இதை பயன்படுத்திக் கொண்டு பலர் வீடுகளை சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். இறந்தவர்களின் உடல்கள் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன என்றார்.

இன்னொருவர் கூறுகையில், மக்கள் போராட்டம் பெரும் கலவரமாக மாறியுள்ளது. நாங்கள் விமான நிலையத்திற்கு வரும் வழியெங்கும் உடல்களைப் பார்த்தோம். அவற்றை புல்டோசர் மூலம் அள்ளி குப்பைகளில் வீசுகின்றனர். பாதுகாப்பு சுத்தமாக இல்லை என்றார்.

அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியத் தூதரகம் இன்னும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

லிபியாவிலிருந்து மீண்டு வந்த இந்தியர்களை விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ. அகமது, வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் ஆகியோர் வரவேற்றனர்.

நேற்று வந்த விமானங்களில் தமிழகம், உ.பி., கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்ளைச் சேர்ந்தவர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

தலைவன் கோட்டை தமிழர்கள் வரவில்லை

இதற்கிடையே, லிபிய மோதலில், 2 பேரைப் பறி கொடுத்திருக்கும் நெல்லை மாவட்டம் தலைவன் கோட்டை கிராமத்தினர், தங்களது பகுதியைச் சேர்ந்த யாரும் முதல் கட்ட மீட்பு விமானங்களில் அழைத்து வரப்படாததால் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் மற்றும் முருகையா பாண்டியன் ஆகியோர் லிபிய மோதலில் சிக்கி பலியாகியுள்ளனர். மேலும் 28 பேர் அங்கு சிக்கியுள்ளனர்.

இவர்கள் மீட்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்படலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர்கள் யாரும் இதில் வரவில்லை. 

88 பேர் துனிஷியா சென்றனர்:

இந்த நிலையில், 88 இந்தியர்கள் சாலை மார்க்கமாக துனிஷியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

உடல் இடையை கூட்ட, குறைக்க, திராட்ச்சை சாப்பிடுங்கள்!

உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சை பழம் உதவுகிறது. இவற்றில் கறுப்புத் திராட்சை,பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சை விட 5 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது. தொடர்ந்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். அதே நேரம் திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது, கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேலை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும். எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும். நீங்கள் எதிர்பார்க்கும் உடல் அமைப்பை பெறலாம்.

Sunday, February 27, 2011

புதுமனைதெருவின் அவலநிலை.


இந்த 19வது வார்டு மெம்பர் சகோதரரி ஃபர்வீன் அவர்கள். பேராசியர் அப்துல் காதர் அவர்களின் மருமகள். மருமகளை தேர்தலில்போட்டியிட வைத்து,வாக்கு சேகரித்தவர் பேராசியர் அவர்கள்தான்.அவர்களின் திறமையின் மீது நம்பிக்கை வைத்துதான் ஓட்டுபோட்டு வெற்றி பெறவைத்தனர் இந்த வார்டு மக்கள்.

நமது 19வது வார்டுமெம்பர்சகோதரரி ஃபர்வீன் அவர்கள் ஒருவர்தான்
பேரூராட்சி மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொல்லாமல் தனது கணவரை வைத்து சில காரியங்களை சென்னையில் இருந்து கொண்டே சம்பளம் பெறுகிறார்.
அவரது கணவருக்கு தனது வீட்டிற்கு எதிரே உள்ள குப்பையை கூட கவனிக்க நேரம் இல்லை.
நமது சகோதரர் ஒருவரின் தனி முயற்சியால் ஊரெங்கும் குப்பை தொட்டி அமைக்கப்பெற்று நமதூரைசுத்தமாகவும் தூய்மையாகவும் வைக்க முயற்சியின் பலன் இது தானா?

இந்த குப்பைனால் வரும் சுகாதரக்கேடும், அதனால் உண்டாகும் பல வியாதிக்கு யார் பொருப்பு?
இதற்கு அந்தந்த வார்டு உறுப்பினர்கள் பொறுப்பு ஏற்பார்களா ?

அதிரை மக்களே இனி வரும் தேர்தலில் உறுப்பினர்
பொறுப்பிற்கு எந்த வேட்பாளர் தகுதியானவர் என்று சிந்தித்து வாக்கு ளியுங்கள்.

இனிவரும் காலங்களில் அதிராம்பட்டினத்தை சுகாதாரபட்டினமாக மாற்ற அனைவரும் இணைந்து முயற்சிப்போம்.....

புகைப்பட உதவி ;ADIRAIXPRESS

நீதிமன்றமா? காவிமன்றமா? ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு!


ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர். இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.
இவ்வழக்கின் மேல்முறையீட்டில், ஒரிசா உயர் நீதிமன்றம் தாரா சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது; ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 12 குற்றவாளிகளுள் மகேந்திரா ஹெம்ப்ராம் என்பவனின் தண்டனையை மட்டும் உறுதி செய்து, மீதி 11 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
ஒரிசா உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இம்மி பிசகாமல் உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது. “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்க வேண்டும்; அதுவும் அந்தந்த சம்பவத்தின் உண்மை நிலை, சூழ்நிலையை பொறுத்தே அமைய வேண்டும்; இவ்வழக்கில் பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களைக் கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” எனக் குறிப்பிட்டு, தாரா சிங்கின் தண்டனை குறைக்கப்பட்டதை நியாயப்படுத்தியிருக்கிறது. இவ்வழக்கில் சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
1999-ஆம் ஆண்டு ஸ்டெயின்ஸ் பாதிரியார் தனது குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டபொழுது நாட்டில் நிலவிய சூழ்நிலை என்ன? அப்பொழுது வாஜ்பாயின் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடி மக்களும் இந்து மதத்தில் இருந்து தப்பித்து ஓடுவதைத் தடுக்கும் முகமாக, “மதமாற்றம் பற்றித் தேசிய விவாதம் நடத்த வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததோடு, மைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவும் முயன்று கொண்டிருந்தது.
இதற்கு இணையாக இன்னொருபுறம் குஜராத்திலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தது, ஆர்.எஸ்.எஸ். இத்தாக்குதலுக்கு அம்மாநில பா.ஜ.க. அரசு துணை நின்றது. இதே காலகட்டத்தில் ஒரிசாவில் பா.ஜ.க. – பிஜு ஜனதாதள் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வந்தது. நாடெங்கிலும் கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்தும் சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது போல ஸ்டெயின்ஸ் பாதிரியாருக்கு ஒரு பாடம் புகட்டுவது மட்டும்தான் தாரா சிங்கின் நோக்கம் என்றால், அவர் தனது இரு குழந்தைகளோடு தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து ஜீப்பைக் கொளுத்தியிருக்க வேண்டிய அவசியமே கிடையாது. அவரை எழுப்பி மிரட்டிவிட்டு, ரெண்டு தட்டுதட்டிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், தாரா சிங் தலைமையில் வந்த கும்பலோ, மனோகர்பூர் கிராமத்திற்குள் நுழைந்தவுடன், அக்கிராமத்தின் தகவல் தொடர்புகளைத் துண்டித்தனர். தீ வைக்கப்பட்ட ஜீப்பில் இருந்து அம்மூவரும் தப்பித்துவிடாதபடி ஜீப்பைச் சுற்றி நின்றுகொண்ட அக்குண்டர்கள், அம்மூவரும் கருகி இறந்தபின்தான் அக்கிராமத்தை விட்டுத் தப்பிச் சென்றனர்.
ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்திக் கொல்லுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பல் மதம் மாற்றும் பாதிரியார்கள், மதம் மாறிய பழங்குடியினரை மட்டுமின்றி, நாடெங்கிலும் உள்ள சிறுபான்மை கிறித்தவ சமூகத்தினர் மத்தியில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை உருவாக்க முயன்றது என்பதுதான் உண்மை. இந்தியத் தண்டனைச் சட்டங்களின்படி பயங்கரவாதக் குற்றமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டிய இக்கொலையை, நீதிபதிகள் சாதாரண கொலை வழக்காக நீர்த்துப் போகச் செய்துவிட்டனர்.
ஒரு உயிரற்ற கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில், அப்பாவியான அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை அளிக்கத் தயங்காத உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்டு மூவரை உயிரோடு கொளுத்திக் கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்காமல் கருணை காட்டியிருக்கிறது. எப்பேர்பட்ட நடுநிலை! எப்பேர்பட்ட மதச்சார்பின்மை!
இப்படுகொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட வாத்வா கமிசன், “1991-க்கும் 1998-க்கும் இடைபட்ட காலத்தில் ஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் – படுகொலை நடந்த பழங்குடியின மக்கள் வசித்து வரும் மாவட்டம் – குறிப்பிடத்தக்க அளவில் கிறித்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இக்காலகட்டத்தில் கிறித்தவ மக்கள் தொகை அதற்கு முந்தைய காலத்தைவிட 575 எண்ணம்தான் அதிகரித்திருக்கிறது. இது இயற்கையான உயர்வுதான்” எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ இந்த உண்மையை ஒதுக்கித் தள்ளிவிட்டு, மதம் மாற்றுவதைத்தான் அபாயகரமானதைப் போலத் தீர்ப்பு எழுதியுள்ளனர்.
‘‘பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்ற நீதிபதிகளின் சூக்குமமான வார்த்தைகளுக்கு, “கிறித்தவர்கள் மருந்து கொடுத்து, கல்வி கொடுத்துப் பழங்குடியின மக்களை மதம் மாற்றுவது சட்டப்படி குற்றம்” என்ற ஆர்.எஸ்.எஸ்.-இன் கொள்கையைத்தான் பொழிப்புரையாக எழுத முடியும்.
இக்காவித் தீர்ப்பைக் கண்டித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தவுடன், “பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” என்ற வரிகள் வரும் பத்தியைத் தீர்ப்பில் இருந்து நீதிபதிகள் நீக்கிவிட்டனர்.
இதை நீக்கியவுடன், ” தாரா சிங்கிற்கு மரண தண்டனை அளிக்கப்படாதது ஏன்?” என்ற கேள்வி வந்துவிடும் என்பதை உணர்ந்திருந்த நீதிபதிகள், “குற்றம் நடந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டதால், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை அதிகரிக்கத் தேவையில்லை” எனத் தீர்ப்பைத் திருத்தியும் விட்டனர்.
தாரா சிங்கிற்கு அதிகபட்ச தண்டனை அளிக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டுதான் நீதிபதிகள் செயல்பட்டுள்ளனர் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?
600-க்கும் மேற்பட்ட முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட மும்பக் கலவரம் நடந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2,000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம் நடந்து 8 ஆண்டுகள் மறைந்துவிட்டன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பார்த்தால், இக்குற்றச் செயல்களைப் புரிந்த இந்து மதவெறி பயங்கரவாதிகளுள் ஒருவருக்குக்கூட அதிகபட்ச தண்டனை அளிக்கவே முடியாது.
“பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்பதற்குப் பதிலாக, “மற்றவர்களின் மத நம்பிக்கையில் எந்த வழியில் தலையீடு செய்வதையும் நியாயப்படுத்த முடியாது” எனத் தீர்ப்பு தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. முழுக்க நனைந்த பின்னும் முக்காடு போட்டுத் திரிவது என்பது இதுதானோ!

-நன்றி புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2011

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக்குக்கு 3 தொகுதிகள், அதிமுக கூட்டணியில் மமக-விற்கு 3 தொகுதிகள்

பிப்.27:வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்குக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போன்று அதிமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அண்மையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர்மொய்தீன் இன்று சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்தி்ப்புக்குப் பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காதர் மொய்தீன், வெற்றிகரமாக அமைந்துள்ள இந்தக் கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், கூட்டணியின் வெற்றிக்கு தாங்கள் பாடுபடப் போவதாகவும் கூறினார்.

இதற்கிடையே அதிமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


கர்ப்பிணிகள் உயிரைப் பறித்த கெட்டுப்போன குளுக்கோஸ்- 13 பேர் பலி :ராஜஸ்தானில் நடந்தது விபரீத

ஜோத்பூர்,பிப்.27:ராஜஸ்தானில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிகளுக்கு, சத்துக்காக குளுக்கோஸ் மருந்தை ஏற்றியபோது, அதிகளவு ரத்தப் போக்கு ஏற்பட்டு 13 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விசாரணையில், கெட்டுப் போன குளுக்கோஸ் திரவத்தை ஊசி மூலம் அவர்களுக்கு ஏற்றியது தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உமைத் என்ற அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கர்ப்பிணி பெண்கள் சிலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சத்துக்காக குளுக்கோஸ் மருந்து ஏற்றப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களிலேயே, அவர்களுக்கு அளவுக்கு அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தாலும், 13 பேர் பரிதாபமாக இறந்து போயினர். மேலும், நான்கு பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுகுறித்து டாக்டர்கள் தரப்பில் கூறுகையில்,"கடந்த 23ம் தேதி வரை, அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதால், ஒன்பது பேர் இறந்தனர். அடுத்த சில நாட்களிலேயே, பலி எண்ணிக்கை 13 ஐ தொட்டதால், குளுக்கோஸ் மருந்தில் தான் கோளாறு இருப்பதாக நினைத்து, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அதைச் செலுத்துவதை நிறுத்தினோம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13கர்ப்பிணிகள் இறந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றனர்.

இதையடுத்து, மருத்துவ உயரதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு நடத்தினர். இதில், கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ், கெட்டுப்போனது என்பது தெரியவந்தது. இதை செலுத்தியதால் தான், அதிக அளவு ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது என்பதும் முதல் கட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
சம்பந்தபட்ட குளுக்கோஸ் திரவம், இந்தூரைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் மீதும், இதை விற்பனை செய்த உள்ளூர் மருந்து விற்பனை மையம் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மருந்து விற்பனையாளர் கைது செய்யப்பட்டார். இருந்தாலும், மருந்து விற்பனையாளர் சங்க பிரதிநிதிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து, அவர் விடுதலை செய்யப்பட்டார்.

ஜோத்பூர் போலீஸ் கமிஷனர் பூபேந்திர குமார் கூறியதாவது: "ராஜஸ்தான் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, விசாரணையை துவக்கியுள்ளோம். 5,000 பாட்டில் குளுக்கோஸ், இந்த நிறுவனம் மூலம் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இதுவரை விற்பனை செய்யப்படாத குளுக்கோஸ் பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளோம். அவற்றை ஆய்வக சோதனைக்கும் பரிந்துரை செய்துள்ளோம். சோதனை முடிவுகள் வெளியான பின், உண்மையான காரணம் என்ன என்பது தெரிய வரும்." இவ்வாறு பூபேந்திர குமார் கூறினார்.

உமைத் மருத்துவமனை கண்காணிப்பாளர் நரேந்திர சங்கானி கூறுகையில், "எங்கள் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், சம்பந்தபட்ட மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் உள்ளூர் டீலர் ஆகியோருக்கு எதிராக புகார் கொடுத்துள்ளோம்" என்றார்.

இதற்கிடையே, உமைத் மருத்துவமனைக்கு வந்த, மாநில மருத்துவ அதிகாரிகள், அந்த மருத்துவமனையின் பிரசவ அறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மையத்தை தற்காலிகமாக மூடும்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு சார்பில் விசாரணை நடத்தவும், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.


சுனில் ஜோஷி கொலை: பெண் ஹிந்துத்துவ தீவிரவாதி பிரக்​யாசிங் தாக்கூர் கைது

மும்பை,பிப்.27:ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சுனில் ஜோஷி கொலைத் தொடர்பான வழக்கில் ஹிந்துத்துவா பெண் தீவிரவாதியான சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே மலேகான்-2008 குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிகிட்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேகான் வழக்கை விசாரித்துவரும் Maharashtra Control of Organised Crime Act (MCOCA) நீதிமன்றத்தின் அனுமதியுடன் மத்தியபிரதேச போலீஸார் பிரக்யா சிங்கை கைது செய்தனர். இதனை சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ரோஹினி சலியன் தெரிவித்தார்.

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் முக்கிய பங்காற்றிய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சுனில் ஜோஷி கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலம் தேவாஸில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அஸிமானந்தாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜோஷியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்-காரர்கள்தாம் என்ற உண்மை வெளியானது.

ஜோஷி கொல்லப்பட்ட தினம் இவருடைய வீட்டிற்கு சென்ற பிரக்யா சிங் ஜோஷியின் பொருட்களையும் இதர ஆதாரங்களையும் அங்கிருந்து கடத்திச் சென்றதாக புலனாய்வுக்குழு கண்டறிந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


ஆதரவாளர்களுக்கு ஆயுதம் வழங்கும் கத்தாஃபி

திரிபோலி,பிப்.27:உள்நாட்டில் எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்து சர்வதேச அளவில் எதிர்ப்பு அதிகரித்த நிலையில் தனது ஆதரவாளர்களுக்கு ஆயுதங்களை வழங்குகிறார் அந்நாட்டு சர்வாதிகாரி முஅம்மர் கத்தாஃபி.

ஆயுதக் கிடங்குகளை எனது ஆதரவாளர்களுக்கு திறந்துக் கொடுத்துள்ளேன் என கத்தாஃபி தெரிவித்துள்ளார்.

திரிபோலியில் போலீஸ் நிலையங்கள் ஆயுதம் ஏந்திய கத்தாஃபியின் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டிலிருப்பதாக AP நியூஸ் கூறுகிறது. இவர்களின் ட்ரக்குகள் தெருக்களில் ரோந்து வந்துக் கொண்டிருக்கின்றன. லிபியாவின் பல பகுதிகளிலும் ராணுவம் மக்களுடன் சேர்ந்ததால் இந்த நடவடிக்கையை கத்தாஃபி மேற்கொண்டுள்ளார்.

கத்தாஃபி ஆதரவாளர்களின் தாக்குதலில் நேற்றும் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். லிபியாவுக்கு எதிரான தடையை பிரகடனப்படுத்திய உத்தரவில் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் இரவு கையெழுத்திட்டார்.

திரிபோலியில் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. ராணுவத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. பிரிட்டனும் கத்தாஃபியின் சொத்துக்களை முடக்க தீர்மானித்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும், ஐரோப்பிய யூனியனும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கின்றன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சிறப்புக்கூட்டம் ஒன்றை கூட்டுகிறது. மக்களை கொல்லும் கத்தாஃபிக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் வலியுறுத்தியுள்ளார்.

லிபியாவை கவுனிசிலிருந்து வெளியேற்ற ஐ.நா மனித உரிமை கவுன்சில் ஒருமுகமாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. கத்தாஃபி அரசு நடத்தும் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே,"நான் மக்கள் மத்தியில்தான் உள்ளேன் கடைசி வரை போராடுவேன் வெளிநாடுகள் அத்துமீறி நுழைவதை என்ன விலைக் கொடுத்தும் தடுப்பேன்" என கத்தாஃபி கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


யெமன் எழுச்சிப் போராட்டத்தில் பழங்குடியினரும் இணைகின்றனர்

ஸன்ஆ,பிப்.27:ஏகாதிபத்தியவாதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் ஆட்சிக்கெதிராக யெமன் நாட்டில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அந்நாட்டின் பிரபல பழங்குடி இனத்தவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.

ஸன்ஆவின் பழங்குடியினர் பகுதியில் நேற்று நடந்த பழங்குடியின தலைவர்களின் கூட்டத்தில் இதுத் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஹாஷித், பாகில் உள்பட முக்கிய பழங்குடியினத் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

அமைதியாக நடந்துவரும் போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் அரசு நடவடிக்கையைக் கண்டித்து ஆளுங்கட்சியான ஜெனரல் பீப்பிள்ஸ் காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்வதாக ஹாஷித் பழங்குடியினத் தலைவர் ஹுஸைன் பின் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார்.

யெமனில் பழங்குடியினருக்கு வலுவான செல்வாக்கு உள்ளது. யெமனில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தில் ஸன்ஆ பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


எகிப்து:போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பலம் பிரயோகித்த ராணுவம்

கெய்ரோ,பிப்.27:முபாரக் ஆட்சியில் அங்கம் வகித்த அமைச்சர்களை இடைக்கால அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமெனக்கோரி தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டம் நடத்த திரண்டவர்களை அந்நாட்டு ராணுவம் பலம் பிரயோகித்து வெளியேற்றியுள்ளது.

போராட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் மீது லத்திசார்ஜ் நடத்தியும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் நடவடிக்கையை மேற்கொண்டது ராணுவம்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடினர். முபாரக் அமைச்சரவையிலிருப்பவர்கள் இடைக்கால அரசில் இடம்பெற மாட்டார்கள் என்ற ராணுவம் அளித்த வாக்குறுதியைப் பேண வேண்டுமென மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நடு இரவுக்குப் பிறகு ராணுவம் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தெரு விளக்குகளை அணைத்துவிட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ராணுவத்தின் அத்துமீறிய நடவடிக்கையில் பலர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

மக்கள் நகரத்தை விட்டு வெளியேறினாலும், அருகிலுள்ள இடங்களில் முகாமிட்டுள்ளனர். ஆனால், ராணுவத்தின் நடவடிக்கைக் குறித்து ராணுவ சுப்ரீம் கவுன்சில் மன்னிப்புக் கோரியுள்ளது.

புரட்சியின் புத்திரர்களுடன் பிரச்சனை ஏற்பட்டதில் வருந்துவதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறு நிகழாது எனவும் ராணுவ சுப்ரீம் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


குண்டுவெடிப்பு:ஈராக்கில் முக்கிய எண்ணை சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டது

பாக்தாத்,பிப்.27:ஈராக்கில் முக்கிய எண்ணை சுத்திகரிப்பு ஆலை ஒன்று பைஜி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

நேற்று காலை நடந்த குண்டுவெடிப்பிலும், துப்பாக்கிச்சூட்டிலும் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

வடக்கு பாக்தாதில் ஸலாஹுத்தீன் மாகாணத்தில் எண்ணை சுத்திகரிப்புச் சாலையின் ஒரு யூனிட்டில் மர்ம நபர்கள் குண்டுவைத்துள்ளனர். பெரும் சேதம் விளைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னர் போராளிகளின் வலுவான பகுதியாகயிருந்தது பைஜி. பாக்தாத், பஸ்ரா ஆகியவற்றுடன் ஈராக்கின் முக்கிய எண்ணை சுத்திகரிப்பு ஆலை பைஜியில் உள்ளது.

ஒன்றரை லட்சம் பேரல் எண்ணை தினமும் இங்கு சுத்திகரிக்கப்படுகிறது. ஆலை முழுவதும் மூடப்பட்டுள்ளதாக மாகாண கவர்னர் அஹ்மத் அல் ஜுபவ்ரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


லிபியாவில் மக்கள் எழுச்சி அதிகரிப்பு​ - சாலையெங்கு​ம் உடல்கள் கிடக்கின்ற​ன - மீண்டு வந்த இந்தியர்கள்

டெல்லி,பிப்.27:லிபியாவில் மக்கள் எழுச்சி அதிகரித்துள்ளது. அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடந்து வருகிறது. சாலையெங்கும் உடல்களாக கிடக்கின்றன. அவற்றை புல்டோசர்கள் மூலம் அகற்றி குப்பைகளில் வீசுகிறார்கள் என்று அங்கிருந்து மீண்டு வந்த இந்தியர்கள் கூறியுள்ளனர்.

லிபியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்க இரண்டு சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்குகிறது. இந்த விமானங்கள் நேற்று லிபியா சென்று இரண்டு கட்டமாக 528 இந்தியர்களை மீட்டு கொண்டு வந்துள்ளன.

முதல் விமானம் 291 பேருடன் டெல்லிக்கு வந்து சேர்ந்தது. அதேபோல 237 பேருடன் இரண்டாவது விமானம் வந்து சேர்ந்தது. இரு விமானங்களிலும் ஏராளமான தமிழர்களும் வந்துள்ளனர்.

விமான நிலையத்தில் முகம்மது சாலி என்ற என்ஜீனியர் கூறுகையில், லிபியாவில் நிலைமை மோசமடைந்துள்ளது. மக்கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் உயிரைக் கையில் பிடித்தபடி வீடுகளுக்குள் அடைந்து கிடந்தோம்.

தண்ணீர், உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவுகிறது. மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர். போலீஸாரை எங்குமே காண முடியவில்லை. காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது.

இதை பயன்படுத்திக் கொண்டு பலர் வீடுகளை சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். இறந்தவர்களின் உடல்கள் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன என்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், மக்கள் போராட்டம் பெரும் கலவரமாக மாறியுள்ளது. நாங்கள் விமான நிலையத்திற்கு வரும் வழியெங்கும் உடல்களைப் பார்த்தோம். அவற்றை புல்டோசர் மூலம் அள்ளி குப்பைகளில் வீசுகின்றனர். பாதுகாப்பு சுத்தமாக இல்லை என்றார்.

அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியத் தூதரகம் இன்னும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

லிபியாவிலிருந்து மீண்டு வந்த இந்தியர்களை விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமது, வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் ஆகியோர் வரவேற்றனர்.

நேற்று வந்த விமானங்களில் தமிழகம், உ.பி., கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்ளைச் சேர்ந்தவர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

thatstamil


Thursday, February 24, 2011

கலைஞரே! இது நியாயமா?

இன்று தமிழக அரசுக்கு உள்ள கடன் தொகை தற்போதய நிலவரப்படி ஒரு லட்சம் கோடியை தாண்டி விட்டது. இவை அனைத்தும் இலவச திட்டங்களால் வந்ததாக பொருளாதார நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். அன்பழகனோ இலவச திட்டங்கள்தான் பலரின் வயிற்றைக் கழுவுகிறது. எனவே அதை குறை சொல்லாதீர்கள் என்கிறார். தமிழக அரசு போடும் இலவச திட்டங்களில் சத்துணவை தவிர மற்ற அனைத்து திட்டங்களும் விழலுக்கு இறைத்த நீர்தான். யாருக்கும் எந்த பயனையும் இந்த இலசவ திட்டங்கள் ஏற்ப்படுத்தப் போவதில்லை.
இலவச கலர் டிவி கொடுக்கச் சொல்லி யார் அழுதது?சினிமா நடிகர்களுக்கு இலவச மனைகளாம். கோடிகளில் புரண்டு கருப்புப் பணத்திலேயே வாழ்க்கையை ஓட்டி இளைய சமுதாயத்தை கெடுத்து தொலைக்கும் இந்த கூத்தாடிகளுக்கு ஏழைகளின் வரிப் பணத்தில் இலவச வீடு. இது நியாயமா கலைஞரே!
மணி மண்டபங்கள்பல தலைவர்களுக்கும் சிலைகள் என்று கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டுகிறீர்கள். இந்த மணிமண்டபங்களால் பொது மக்களுக்கு ஏதும் பயன் இருக்கிறதாஇதற்கு ஒதுக்கக் கூடிய பணத்தை கிராமங்கள் தோறும் குளங்களை தூர்வாரி வீணாக கடலில் கலக்கும் மழை நீரை சேகரிக்கக் கூடாதாஒரு பகுத்தறிவாதி சிலைகளை திறக்கலாமாஅதற்கு சென்று மாலை போட்டால் அதற்கு விளங்குமா?பெரியாரின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு இன்று மஞ்சள் துண்டோடு வலம் வருகிறீர்களே! கலைஞரே இது நியாயமா?
எண்ணிக்கையிலேயே அடங்க முடியாத அளவுக்கு உங்கள் அமைச்சர் ராஜா ஊழல் பண்ணியது உங்களுக்கு தெரியாமல் நடந்திருக்குமா? 'நானும்,கண்ணதாசனும் ஆரம்ப காலங்களில் சென்னையில் சிங்கிள் டீயை பகுதியாக்கி குடிப்போம். அவ்வளவு வறுமை'என்று முன்பு எங்கோ படித்தது ஞாபகம் வருகிறது. இன்று ஆசியாவில் உள்ள பணக்காரர்களில் நீங்களும்உங்கள் குடும்பமும் வருகிறதே! அனைத்தும் கதை வசனம் எழுதிதான் வந்ததா! மெய்யாலுமா கலைஞரே!
எவ்வளவுதான் பணம் இருந்தாலும் பசி தீரும்வரைதான் சாப்பிட முடியும். தூங்குவதற்கு ஆறடி இடம் போதும். உடுத்திக் கொள்ள வேட்டியும் சட்டையும் ஒருவனுக்கு ஐந்து ஆறு செட்கள் இருந்தாலே போதும். தங்குவதற்கு ஒரு வீடு இருந்தால் போதும். ரோட்டிலே கிடக்கும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் எது தேவையோ அதுதான் உங்களுக்கும் தேவை. எனவே இத்தனை கோடிகளை வைத்துக் கொண்டு அதுவும் இந்த தள்ளாத வயதில் என்ன சுகத்தை அனுபவித்து விடப் போகிறீர்கள்எனவே தேவைக்குப் போக பாக்கி சொத்துக்களை எல்லாம் அரசாங்கத்திடமே கொடுத்துடு ராசா! உங்கள் மேல் உள்ள பிரியத்தில்தான் சொல்கிறேன். சரி கொடுக்க மனது இல்லா விட்டாலும் இனிமேலாவது லஞ்சம் இல்லாத ஒரு ஆட்சியை வழங்க ஸ்டாலினுக்கு அறிவுரையாவது வழங்கக் கூடாதாஉங்களை தூக்கி எறிந்து விட்டு அந்த அம்மாவை உட்கார வைக்கலாம் என்றால் அதுவோ மதம் முழுங்கி மகாதேவன். தமிழ்நாட்டையே வித்துட்டு அந்தம்மா கர்நாடகாவுல போய் உட்கார்ந்திரும். அந்தம்மா திரும்பவும் ஆட்சிக்கு வர நீங்களே வழி வகுக்கலாமாஇது நியாயமா கலைஞரே!
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப் படும்.
-திருக்குறள்
கலைஞரேபோதும் இலவச திட்டம்!
நாட்டுக்குத் தேவை நீண்ட கால திட்டம்!
அது இல்லையேல் தமிழர்கள் சேர்ந்து
கொடுப்பார்கள் உமக்கு திண்டாட்டம்!:-)

படிக்கும் காலங்களில் டி.ராஜேந்தர் படம் பார்த்ததின் பாதிப்பு.
மதம் சம்பந்தமாகவே பதிவுகள் தருகிறீர்களேநாட்டு நடப்பையும் சேர்த்துக் கொள்ளக்கூடாதா என்று என் நண்பர் கேட்டார்அதன் விளைவு பிறந்தது சமூக அக்கறையுடன் ஒருபதிவு.

4 வயது குழந்தையை அடித்த ஐஏஎஸ் அதிகாரி!!!

சண்டீகர், பிப்.23- பஞ்சாபில் பொது இடத்தில் 4 வயது குழந்தையை அறைந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மீது குழந்தைகள் உரிமை ஆணையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரீமா என்னும் 4 வயது குழந்தை சண்டீகரில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் நர்சரி பிரிவில் படித்து வருகிறார். சமீபத்தில், பள்ளி முடிந்து அக்குழந்தை ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். வழியில் வேறொரு குழந்தையை அவரது வீட்டில் விடுவதற்காக ஆட்டோ ஓட்டுநர் வண்டியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

அப்போது ஆட்டோவில் அமர்ந்திருந்த கரீமா, கியர் கம்பியை இழுத்ததால் ஆட்டோ பின்புறம் வந்த காரின் கதவில் இடித்ததாக கூறப்படுகிறது. அந்த காரில் சுஜாதா தாஸ் என்னும் பெண் ஐஏஎஸ் அதிகாரி இருந்தார். தனது காரில் கோடு விழுந்ததால் கோபமடைந்த அவர் காரை விட்டு இறங்கி வந்து கரீமாவின் கன்னத்தில் அறைந்துள்ளார். தகவல் அறிந்த கரீமாவின் தந்தை போலீஸாரிடம் புகார் அளிக்கச் சென்றார். ஆனால், அவரிடம் ஐஏஎஸ் அதிகாரி
சுஜாதா தாஸ் தரப்பில் சமாதானம் பேசப்பட்டது. மேலும், குழந்தையின் கன்னத்தில்
அறைந்ததற்காக அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக சண்டீகரைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று அளித்த மனுவின் அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரி மீது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான ஆணையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. "ஒரு அரசு ஊழியர் இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கக் கூடாது. இது நடத்தை விதிமீறல் என்பது தெளிவாகிறது. இச்சம்பவம் மீது நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம். இதுதொடர்பாக பஞ்சாப் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதன் பதில் கிடைத்த பின்னர் அடுத்த நடவடிக்கை குறித்து ஆராயப்படும்." என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிந்திக்கவும்: இவர் எப்படி? ஐ.எ.எஸ். அதிகாரி ஆனார் என்ற சந்தேகம் வருகிறது. தகுதி இல்லாதவர்கள் எல்லாம் வட இந்தியாவில் இருந்து ஐ.எ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை இது நிருபிப்பதாக அமைந்துள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளை அடிக்க கூடாது என்ற சட்டம் நடை முறையில் இருக்கும் போது, ஒரு ஐ.எ.எஸ். அதிகாரி அதுவும் 4 வயது குழந்தையின் கன்னத்தில் அடித்திருப்பது இவர்களது தேர்வு முறையை சரியில்லை என்பதையே காட்டுகிறது. ஒன்றும் அறியாத 4 வயது பட்சிளம் குழந்தையின் கன்னத்தில் அடிப்பது என்பதை சாதாரண அறிவு உள்ள ஒருவர் கூட செய்யமாட்டார். அப்படி இருக்க இவர் எல்லாம் ஐ.எ.எஸ். அதிகாரியாக இருந்து ஒரு மாவட்டத்தை எப்படி நீதியோடு பரிபாலம் செய்யப்போகிறா.