Sunday, February 27, 2011

யெமன் எழுச்சிப் போராட்டத்தில் பழங்குடியினரும் இணைகின்றனர்

ஸன்ஆ,பிப்.27:ஏகாதிபத்தியவாதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் ஆட்சிக்கெதிராக யெமன் நாட்டில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அந்நாட்டின் பிரபல பழங்குடி இனத்தவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.

ஸன்ஆவின் பழங்குடியினர் பகுதியில் நேற்று நடந்த பழங்குடியின தலைவர்களின் கூட்டத்தில் இதுத் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஹாஷித், பாகில் உள்பட முக்கிய பழங்குடியினத் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

அமைதியாக நடந்துவரும் போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் அரசு நடவடிக்கையைக் கண்டித்து ஆளுங்கட்சியான ஜெனரல் பீப்பிள்ஸ் காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்வதாக ஹாஷித் பழங்குடியினத் தலைவர் ஹுஸைன் பின் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார்.

யெமனில் பழங்குடியினருக்கு வலுவான செல்வாக்கு உள்ளது. யெமனில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தில் ஸன்ஆ பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


0 comments:

Post a Comment