Monday, February 7, 2011

எல்லை கல் ஒன்று சாமியாகிறது!! பக்தி முத்தி போச்சுடா!

ராமநாதபுரம்: ரோட்டோர எல்லை கல்லை சிலர் கடவுளாக சித்தரித்து விட்டு செல்ல, பலரும் அதை வழிபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எல்லை கல் ஒன்று உள்ளது. சில நாட்களுக்கு முன், அந்த கல் மீது சிலர் மாலை போட்டு, பூஜை நடந்ததற்கான அடையாளங்களுடன் விட்டு சென்றனர். அதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து, வழிபட துவங்கினர்.சில நாட்களில் எல்லை கல் வழிபாடு பிரபலமானது. அருகில் உள்ள கிராமத்தினர் இவ்வழியாக செல்லும் போது எல்லை கல்லை வழிபடுவதை வழக்கமாக்கினர். நெடுஞ்சாலைத்துறையினர் ஒட்டிய ஒளிரும் ஸ்டிக்கரால், இரவில் கல் ஒளிர்வதை கூட, கடவுளின் அருள் என அப்பகுதியினர் நம்புகின்றனர். ஏன் இந்த மக்கள் நவீன உகத்தில் இவர்கள் மூடர்களாக மாறுகின்றனர் என்று புரியவில்லை. இவர்கள் கடவுள் பக்திக்கு ஒரு அளவே இல்லையா? இனி தமிழ்நாட்டில் ஒரு எல்லை கல்லையும் விட்டு வைக்க மாட்டார்கள். இது போன்ற மூட பழக்கவழக்கங்களை மக்களிடம் இருந்து தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு, அந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்

0 comments:

Post a Comment