Monday, February 21, 2011

அடுத்து ஊழல் பட்டியலில் யார்? தொடரும் சி.பி.ஐ. ரெய்டு!

சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., ரெய்டு, கைது நடவடிக்கை என தி.மு.க.,வை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சி.பி.ஐ.,மூலம் நெருக்கடி துவங்கியிருக்கிறது. 2 ஜி., விகாரத்தினால் தம் மீது விழுந்துள்ள கறையை அகற்ற தி.மு.க., கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. மத்தியில் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சி.பி.ஐ., நடவடிக்கையை முடக்க முடியாமல் போனது இக்கட்சிக்கு பெரும் பின்னடை வாகவே கருதப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மத்திய அரசில் (2004 முதல் 2009 வரை) அங்கம் வகித்த பா.ம.க., அன்புமணிக்கு மத்திய சுகாதார துறை அமைச்சர் பதவியை பிடித்து கொண்டது. இவர் அமைச்சராக இருந்த காலத்தில் இவருக்கு சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் மூர்த்தி. இவர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். 
கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் கோடிக்கணக்கில் முறைகேடு செய்து ஏற்கனவே மருத்துவ கவுன்சில் தலைவர் கேதான் தேசாய் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் இந்தூரில் ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி அமைக்க அனுமதி வழங்கியதில் விதிமுறை மீறப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் மூர்த்தி பணம் வாங்கி கொடுப்பதில் இடைத்தரகராக இருந்திருக்கலாம் என்று ஒரு வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தை சி.பி.ஐ., தூசி தட்டி எடுத்திருக்கிறது . மூர்த்திக்கும் மருத்துவ துறைக்கும் சம்பந்தமே இல்லாத போது இவர் எப்படி பணம் வாங்கி கொடுத்து கல்லூரிக்கு அனுமதி வாங்கினார் என்பதும் ஒரு சிறப்பு கேள்வியாக உள்ளது.

இதனையடுத்து சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள உள்ள மூர்த்தி வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இங்குள்ள ஆவணங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு அதிகாரிகள் கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றனர். முதல்வர் கருணாநிதி டில்லிக்கு சென்ற போது தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறது என்றும் இதனையடுத்து ராமதாஸ் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார். இந்த கூட்டணியில் பா.ம.க.,வை சேர்க்க வேண்டாம் என சோனியா கூறியதாகவும் ஒரு தகவல் வந்தது. 

மாஜி அமைச்சர் அன்பு மணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் காங்., தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தி.மு.க.,வுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு 31 சீட்டும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் கட்டுப்பாட்டில் இருக்கும் சி.பி.ஐ., தற்போது பா.ம.க., மீது கண் வைத்துள்ளதோ என்ற சந்தேகம் வலுக்கிறது. அன்பு மணியிடமும் விசாரணை நடக்குமா என்றும் கேள்வியும் எழுந்துள்ளது.

0 comments:

Post a Comment