Tuesday, February 22, 2011

பின் அலியை ஒப்படையுங்கள் - சவூதியிடம் துனீஷியா கோரிக்கை

துனீஸ்,பிப்.21:மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் அடைக்கலம் புகுந்துள்ள துனீசிய நாட்டு முன்னாள் ஏகாதிபத்தியவாதியான ஜைனுல் ஆபிதீன் பின் அலியை தங்களிடம் ஒப்படைக்குமாறு சவூதியிடம் துனீசியா கோரியுள்ளது.

முன்னாள் அதிபர் பின் அலியின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளிருப்பதாக துனீசிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இச்சூழலில் சவூதி அரேபியா பின் அலியை ஒப்படைக்க வேண்டுமென
துனீசியா கோரிக்கை விடுத்துள்ளது.

அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பின் அலி கடந்த மாதம் 14-ஆம் தேதி சவூதிஅரேபியாவில் அடைக்கலம் புகுந்தார். துனீசியாவில் ஏற்பட்ட புரட்சி ஏற்படுத்திய உத்வேகம் இன்று மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் எழுச்சி பேரலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பின் அலியை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவருடைய உடல்நிலைக் குறித்த அறிக்கையை உடனடியாக ஒப்படைக்க வேண்டுமெனவும் துனீஷியா கோரியுள்ளது.

பின் அலி மரண படுக்கையில் கிடப்பதாக ஊகங்கள் கிளம்பியுள்ள சூழலில் அவருடைய உடல்நிலையைக் குறித்து சவூதிஅரேபியா அரசிடம் துனீசியா ஆராய்ந்துள்ளது.

செய்தி:மாத்யமம்


0 comments:

Post a Comment