Wednesday, February 23, 2011

லிபியாவுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்

கெய்ரோ,பிப்.22:மக்கள் எழுச்சியை அடக்கி ஒடுக்கும் லிபிய அரசுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான O.I.C கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து 57 முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான Organisation of Islamic Countries இன் தலைவர் இக்மலுத்தீன் இஹ்ஸானோக்லு வெளியிட்டுள்ள அறிக்கையில்; 'லிபியாவின் முஅம்மர் கத்தாஃபியின் அரசு அதிகமான படைகளைக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அடக்கி ஒடுக்குவதை கடுமையாக விமர்சித்துள்ளார் அவர்.

அமைதியான மற்றும் தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஆட்சியாளர்கள் தயாராக வேண்டும். கத்தாஃபியின் அரசு அப்பாவி மக்களை குறிவைத்துத் தாக்குவதை நிறுத்தவேண்டும்' என கூறியுள்ளார் அவர்.

செய்தி:AFP


0 comments:

Post a Comment