Sunday, February 13, 2011

பஹ்ரைன் நாட்டைச் சார்ந்த குடும்பம் ஒன்றிற்கு 2650 அமெரிக்க டாலர் வழங்கபடுகிறது!!!

மனாமா,பிப்.13: துனீசியா, எகிப்து ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து அந்நாடுகளின் ஆட்சியாளர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அச்சம் அரபுலக ஆட்சியாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பஹ்ரைன் நாட்டில் வருகிறது 14-ஆம் தேதி எதிர்கட்சியினர் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு மன்னர் ஹமத் பின் ஈஸா அல் கலீஃபா வருகிற வெள்ளிக்கிழமை பஹ்ரைன் நாட்டைச் சார்ந்த குடும்பம் ஒன்றிற்கு ஆயிரம் தினார்(2650 அமெரிக்க டாலர்) வீதம் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். துனீசியா, எகிப்து ஆகிய நாடுகளில் நடந்த எழுச்சியைத் தொடர்ந்து அண்மைக்காலங்களில் பல சலுகைகளை பஹ்ரைன் அரசு தங்களது குடிமக்களுக்கு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment