29 Dec 2012 கோழிக்கோடு:சிறுபான்மை சமூகத்தினருக்கு உரிய அரசியல் சாசன ரீதியிலான உரிமைகளை அனுமதிப்பது மாறி மாறி வரும் அரசுகளின் கடமை என்று ஆல் இந்தியா அஹ்லே ஹதீஸ் அமைப்பின் பொது செயலாளர் மவ்லானா மஹ்தி அஸ்ஸலஃபி கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தில் முஜாஹித் இயக்கத்தின் மாநில மாநாட்டையொட்டி நடந்த இளைஞர்கள் மாநாட்டை துவக்கி வைத்து மவ்லானா மஹ்தி உரையாற்றினார்.
அவர் தனது உரையில் கூறியது:இளைஞர்கள் தீவிரவாத செயல்களின் பக்கம் செல்வதற்கு காரணம் சமூக சூழல் ஆகும். இந்த உண்மையை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய மதசார்பற்ற கொள்கையின் மகத்துவத்தை பாதுகாக்க வேண்டும். இந்தியாவின் மதசார்பற்ற கொள்கை உலகிற்கு முன்மாதிரியாகும்.
ஜனநாயகம் இந்தியாவில் இருப்பதால் தான் பன்முகத்தன்மையும் நீடிக்கிறது. நாட்டின் உயர்ந்த அரசியல்சாசனத்தின் நிழலில் தான் இந்தியாவில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சலுகைகளை அனுபவிக்கின்றனர். ஜனநாயகத்தையும், மதசார்பற்ற கொள்கைகளையும் பலவீனப்படுத்தும் அணுகுமுறைகள் எவரிடமிருந்தும் உருவாக கூடாது. இவ்வாறு அவர் கூறினார். நன்றி, தூது
0 comments:
Post a Comment