Monday, December 24, 2012

போலி என்கவுண்டர்: ஐ.பி அதிகாரிகளிடம் விசாரணை நடத்த தயங்கும் சி.பி.ஐ!

fake encounter  
    
புதுடெல்லி:சாதிக் ஜமால் போலி என்கவுண்டர் வழக்கில் தொடர்புடைய இரண்டு ஐ.பி(இண்டலிஜன்ஸ் பீரோ) உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
     குஜராத்தில் சில உயர் போலீஸ் அதிகாரிகளும் இந்த போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த போலி என்கவுண்டருக்கு சதித் திட்டம் தீட்டியவர்கள் இரண்டு ஐ.பி உயர் அதிகாரிகள் என்பதை சி.பி.ஐ கண்டறிந்தது. இதில் ஒருவர் சாதிக் ஜமால் குறித்த விபரங்களை க்ரைம் ப்ராஞ்ச் போலீசாரிடம் அளித்துள்ளார். இன்னொரு அதிகாரி நிலைமைகளை குறித்து கண்காணித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
 
     குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் சாதிக் ஜமால் போலி என்கவுண்டர் வழக்கில் ஐ.பி அதிகாரிகளின் பங்கினைக் குறித்து சி.பி.ஐயிடம் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கின் முதல் குற்றப்பத்திரிகை இவ்வாரம் சமர்ப்பிக்கப்படும் என்று சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
 
    2003ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி குஜராத் மாநிலம் நரோடாபாட்டியாவில் போலி என்கவுண்டரில் சாதிக் ஜமால் அநியாயமாக கொலைச் செய்யப்பட்டார். நன்றி, தூது

0 comments:

Post a Comment