Tuesday, December 25, 2012

கர்நாடகா:பா.ஜ.க துணை முதல்வரின் வீடுகளில் அதிரடி சோதனை!-தங்கம், வெள்ளி, பணம் பறிமுதல்!

0410-rhesus-monkey-social-rank-genetics_full_600   25 Dec 2012

     பெங்களூர்:கர்நாடக மாநில துணை முதல்வரும் மாநில பாஜக தலைவருமான ஈஸ்வரப்பாவின் சொந்தமான இடங்களில் லோக் ஆயுக்தா போலீஸார் அதிரடி சோதனைகளை நடத்தி தங்கம், வெள்ளி போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். சொத்துக் குவிப்பு குற்றம்சாட்டி வழக்கறிஞர் ஒருவர் லோகாயுக்தாவிடம் முறையிட்டதை அடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பெங்களூருவிலும் ஷிமோவாவிலும் ஈஸ்வரப்பாவுக்கு சொந்தமான ஏழு இடங்களில் லோகாயுக்தா போலீசார் அதிரடி சோதனைகளை நடந்தியிருந்தனர்.ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கமும், சுமார் 37 கிலோ வெள்ளியும் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது.
      விலைமதிப்புமிக்க இப்பொருட்கள் வந்த வழியைக் காட்டும் ஆவணங்கள் உள்ளனவா என்பதை ஆராய்ந்துவருவதாக லோக் ஆயுக்தா போலீசார் தெரிவித்தனர். ஜகதீஷ் ஷெட்டர் முதல்வராகவுள்ள பாஜக அரசில் வருவாய், கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்து ராஜ் போன்ற துறைகளை ஈஸ்வரப்பா கவனித்துவருகிறார் . தற்போது அவரது இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது பாஜக அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனையைத் தான் வரவேற்பதாகவும், தான் களங்கமற்றவர் என்று நிரூபிக்க இந்த விசாரணைகள் உதவும் என்றும் ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.ஆனால் பதவி விலக வேண்டும் என்றெழுந்திருந்த கோரிக்கைகளை அவர் ஏற்கனவே நிராகரித்துள்ளார். நன்றி, தூது

0 comments:

Post a Comment