23 Dec 2012
லக்னோ: பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சமாஜ்வாதி எம்.பி. பிரிஜ்பூஷண் சிங், சிவசேனா முன்னாள் எம்.எல்.ஏ. பவன் பாண்டே ஆகியோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தனர். பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ்பூஷண் சிங், பவன் பாண்டே ஆகியோர் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் தவிர்த்து வந்தனர்.
இதையடுத்து சிபிஜ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ஷாஷிமொலி திவாரி, அந்த இருவருக்கும் டிச.17-ம் தேதி ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தார். இந்நிலையில் இருவரும் லக்னொ சிபிஜ நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தனர். இதையடுத்து டிச.24-ம் தேதி சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நீதிபதி ஷாஷிமௌலி உத்தரவிட்டார்.
1992-ம் ஆண்டு டிச.6-ம் தேதி பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது பிரிஜ்பூஷண் சிங், கொண்டா தொகுதி பாஜக மக்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்தார். தற்போது உத்தரப்பிரதேசத்தின் கேஸர்கஞ்ச் தொகுதி சமாஜவாதி கட்சி எம்.பி.யாக உள்ளார். நன்றி, தூது
0 comments:
Post a Comment