DEC13, டெல்லியின் "மெஹர் வலி" பகுதியில் வக்ப் வாரியத்துக்கு சொந்தமான நூறாண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுவந்த "கௌசியா பள்ளிவாசல்" நேற்று (12/12) இடித்து தள்ளப்பட்டுள்ளது.
DDA (Delhi Development Authority) நிர்வாகத்தினர், ஜே.சி.பி. இயந்திரங்களின் மூலம், மேற்கண்ட பள்ளிவாசல் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட வீடுகளை தரைமட்டமாக்கினர்.
சர்வே எண் "217" ல் அமைந்துள்ள 3.2 ஏக்கர் இடம் முழுவதும், வக்ப் வாரியத்துக்கு சொந்தமானது.
முஸ்லிம் கப்ருஸ்தான் - தர்கா, என "வக்ப்" கெசட்டில் பதிவு செய்யப்பட்டது மட்டுமல்லாமல், இந்த பள்ளிவாசலின் இமாமையும் வக்ப் வாரியமே நியமித்து, மவுலானா ஷாகிர் என்பவருக்கு மாதா மாதம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
நேற்றைய "ஸுபுஹ்" தொழுகையை மவுலானா ஹிஷ்மத் என்பவர் தொழவைத்துள்ளார்.
நேற்று காலை 9 மணியளவில் போலீஸ் படையுடன் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளிவாசலை இடிக்க வந்தபோது, 150க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் திரண்டு போராடியும் பலனில்லை.
போலீஸ் "பலப்பிரயோகம்" செய்து அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி பல்வேறு காவல் நிலையங்களில் வைத்திருந்து விட்டு, மாலையில் விடுவித்துள்ளனர்.
டெல்லியில், தற்போது "கடுங்குளிர் காலம்" என்பதையும் பொருட்படுத்தாமல் ஏழை மக்களின் வீடுகளையும் இடித்து தள்ளியுள்ளது,DDA. இதுகுறித்து டெல்லி வக்ப் வாரியத்தலைவர், சௌத்ரி மதீன் அஹ்மதிடம் கேட்டபோது, இந்த இடம் வக்ப் வாரியத்துக்கு சொந்தமானது தான்.
கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இடத்தை டெல்லி மாநகராட்சி (DDA) கையகப்படுத்தி "அறிவிப்பாணை" வெளியிட்ட சமயத்தில், அது குறித்து யாரும் ஆட்சேபிக்காத நிலையில், இந்த நிலம் மாநகராட்சி சொத்து பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒரு "நிலத்துண்டு" மட்டும் பள்ளிவாசலாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
0 comments:
Post a Comment