Monday, December 31, 2012

மலேகான் குண்டுவெடிப்பு:ஹிந்துத்துவா தீவிரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டான்!

31 Dec 2012 Key accused Manohar Singh admits involvement in 2006 Malegaon bomb blasts
 
    மும்பை:2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவைத்ததை அண்மையில் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதி மனோகர் சிங் ஒப்புக்கொண்டதாக என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட மனோகரை என்.ஐ.ஏ மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. மலேகான் குண்டுவெடிப்பில் சங்க்பரிவார அமைப்புகளின் பங்கு வெளியான பிறகு நடக்கும் முதல் கைது இதுவாகும்.
 
    மனோகர் சிங்கிடமிருந்து ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளதாக சிறப்பு அரசு தரப்பு வழக்குரைஞர் ரோஹிணி ஸாலியான் கூறினார். மனோகர் சிங்கை கஸ்டடியில் வைத்து விசாரித்தால் இதர குற்றவாளிகளைக் குறித்த தகவல் கிடைக்கும் என்று என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 
    2007-ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான ராஜேந்தர் சவுதரியிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மனோகர் சிங் கைது செய்யப்பட்டான். சவுதரிக்கு எதிராக நீதிமன்றம் ப்ரொடக்‌ஷன் வாரண்டை பிறப்பித்திருந்தது.
மாலேகானில் 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 37 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் அதிகமானோர் காயமுற்றனர். நன்றி, தூது

0 comments:

Post a Comment