DEC26, முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த, மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்தாமல், நிதியை திருப்பி அனுப்பிவிடுகின்றன.
ஒதுக்கப்படும் நிதியே பயன்படுத்தாமலிருப்பதால், கூடுதலாக நிதி ஒதுக்கும் பேச்சே எழவில்லை, என மாநில அரசுகள் மீது குற்றம் சாட்டுகிறார், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர், கே.ரஹ்மான் கான். தான் பதவி ஏற்றுக்கொண்டவுடன், பல மாநிலங்களுக்கும் சிறுபான்மை நல திட்டங்கள் குறித்தான தகவல்களை கேட்டு எழுதப்பட்ட கடிதங்களுக்கு இதுவரை பல மாநிலங்கள் பதிலளிக்கவில்லை.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் தான் என்றில்லாமல், பீகார் போன்ற மாநிலங்களும் முஸ்லிம்களின் நலத்திட்டங்களில் அக்கறை காட்டவில்லை என குறைபட்டார், ரஹ்மான் கான்.
டெல்லியில் நேற்று (25/12)மாலை "ஹியூமன் செயின்" என்ற அமைப்பு "Sachar committee Recommendation; Challenges and Implementation" என்ற தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் கலந்துக்கொண்டு பேசும்போது, முஸ்லிம்களின் நலன்கள் மீது பாஜக அரசுகள் அக்கறை காட்டுவதில்லை என்றார்.
இதுகுறித்து கவலை கொண்டுள்ள மத்திய அரசு, திட்டங்களை செயல்படுத்தும் நடைமுறைகளில் மாறுதல்கள் செய்யப்பட்டு, அனைவரும் பயனடையும் வகையில் பார்த்துக் கொள்ளப்படும் என உறுதியளித்தார், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர், கே.ரஹ்மான் கான்.
0 comments:
Post a Comment