Tuesday, December 18, 2012

சிரியாவில் ராணுவமும், எதிர்ப்பாளர்களும் வெற்றி பெற முடியாது: துணை அதிபர்!

Syria VP Farouq al-Sharaa says neither side can win war  
 
     டமாஸ்கஸ்:சிரியாவில் கடந்த 21 மாதங்களாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் ராணுவமோ, எதிர்ப்பாளர்களோ வெற்றிப் பெற முடியாது என்று அந்நாட்டின் துணை அதிபர் ஃபாரூக் அல் ஷர்ஆ தெரிவித்துள்ளார். லெபனான் பத்திரிகையான அல் அக்பருக்கு அளித்த பேட்டியில் ஷர்ஆ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
     2011மார்ச்சில் ஆஸாதிற்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டம் துவங்கிய பிறகு அபூர்வமாக பொதுமேடைகளில் தென்பட்டார் ஷர்ஆ. இப்போரில் ஆஸாத் வெற்றிப் பெற முடியாது என்று ஷர்ஆ உறுதியாக தெரிவித்தார். எதிர்ப்பு போராளிகளின் முன்னேற்றம் தலைநகரின் அனைத்து பகுதிகளும் நடக்கிறது என்ற செய்திகள் வெளியாகி உள்ள சூழலில் ஷர்ஆவின் பேட்டி வெளியாகியுள்ளது.
     வர் மேலும் கூறியது: அரபு நாடுகளும், ஐக்கிய நாடுகள் அவையும் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் நேரம் இது. விசாலமான அதிகாரங்களைக் கொண்ட தேசிய ஐக்கிய அரசை உருவாக்கவேண்டும். ஒவ்வொரு தினங்கள் கழியும் பொழுது அரசியல், ராணுவ தீர்வுகள் கைவிட்டுப் போகின்றன. ஆயுதங்களை உபயோகித்து போரை முடிவுக்கு கொண்டுவர முடியாது. சிரியாவின் ஸ்திரத்தன்மைக்கு தேவையான நிலைபாடுகள்தாம் தேவை. ஒரு தனிநபருக்கோ, ஆட்சிக்கோ சிரியாக்காரர்கள் போர் செய்யவில்லை. இவ்வாறு ஷர்ஆ கூறினார்.
 
     இதனிடையே யர்முக்கில் ராணுவத்திற்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான மோதல் நீடிக்கிறது. ஃபலஸ்தீன் அகதிகள் முகாமில் நேற்று முன் தினம் ஆஸாத் ராணுவம் அநீதமான தாக்குதலை நடத்தியதில் 25க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆஸாதை ஆதரிக்கும் ஃபலஸ்தீன் அமைப்பு ஒன்றின் டமாஸ்கஸ் அலுவலகம் மீது நேற்று எதிர்ப்பாளர்கள் கடுமையான தாக்குதலை நடத்தினர்.

0 comments:

Post a Comment