Thursday, December 27, 2012

கேரளாவில் நடைபெற்ற தேசிய பொதுக்குழு கூட்டத்தில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு





     பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழு டிசம்பர் 22.23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் புத்தனத்தானியில் மலபார் ஹவுஸில் வைத்து தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.இப்பொதுக்குழுவில் துவக்க உரையாற்றிய தேசிய தலைவர் தனதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நவீன சமூக இயக்கம் என்பதையும் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளுக்கு மக்களுக்கு மத்தியில் அமோகமான ஆதரவு கிடைத்து வருகின்றது என்றும் குறிப்பாக வட மாநிலங்களில் நல்ல ஆதரவு கிடைத்து வருகின்றது, சமீபத்தில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? பிரச்சாரத்திற்கு கலந்து கொண்ட மக்கள் வெள்ளமே இதற்கு சாட்சிய் என்றார்.சமூக நீதிக்கான போராட்டத்தில் மக்கள் பாப்புலர் ஃப்ரண்ட் உடன் இருக்கின்றார்கள் என்று கூறிய தேசிய தலைவர் பாப்புலர் ஃப்ரண்டின் "சமூக மாற்றம்" என்ற உன்னத பணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல் வீரர்கள் காட்டி வரும் தியாகம், போராட்டம் ஆகியவற்றை கோடிட்டு காட்டியதுடன் ஒவ்வொரு உறுப்பினரும் மென்மேலும் தங்களை செம்மைப்படுத்தி சமூகத்தின் உதாரண புருஷர்களாக மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவ்விஷயத்தில் தலைவர்கள் போதிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

     பின்பு, தேசிய பொதுச்செயலாலர் கே.எம். ஷரீஃப் ஆண்டறிக்கையை சமர்பித்தார். அறிக்கையில் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களின் எண்ணிக்கை நல்ல முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கண்டுள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் சமூக மேம்பாட்டு பணிகளும், ஸ்கூல் சலோ, கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்றவை சமூகத்திற்கு மிகவும் உதவிகரமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்தது என்றார்.

     மேலும் பொதுக்குழு சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான விவாதங்களையும் எதிர்காலத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் முன்னேற்றம், நிகழ்ச்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்பின் அடுத்த இரண்டாண்டிற்கான தேசிய செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

     புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தேசிய தலைவர், பொதுச்செயலாளர், துணைத்தலைவர் உள்ளிட்ட தேசிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர்.

     இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கே.எம். ஷரீஃப் தேசிய தலைவராகவும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பி.கோயா துணைத்தலைவராகவும், ஓ.எம்.ஏ சலாம் பொதுச்செயலாளராகவும், தமிழகத்தைச் சேர்ந்த முஹம்மது அலி ஜின்னா மற்றும் கர்நாடகாவைச்சேர்ந்த முஹம்மது இலியாஸ் தும்பே ஆகிய இருவரும் செயலாளர்களாகவும், மேற்கு வங்கத்தைச்சேர்ந்த முஹம்மது ஷஹாபுதீன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.


    தேசிய செயற்குழு உறுப்பினர்களாக இ.எம். அப்துர்ரஹ்மான், யா முஹைதீன், ஹாமித் முஹம்மது, முஹம்மது ரோஷன், எம். முஹம்மது இஸ்மாயில், எம். அப்துஸ் சமது, அனீஸ் முஹம்மது, மெளலானா உஸ்மான் பேக், வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

     ஐ. நா சபையில் ஃபலஸ்தீனுக்கு பார்வையாளர் நாடு என்ற ஸ்தானத்திற்கு இந்தியா அளித்துள்ள ஆதரவு சரியான முடிவு என்றும், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு அரசின் மதச்சார்பற்ற தன்மைக்கான சோதனைக் களம் என்றும், யு.ஏ.பி.ஏ போன்ற கருப்புச் சட்டங்கள் இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்தனது என்று பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் சரியான நீதியை வழங்குவது மக்களுக்கு அரசியல் சாசனத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் எனவும், ஃபலஸ்தீனில் போர்க்குற்றங்களை நிகழ்த்தியதற்காக இஸ்ரேலிய தலைவர்களை சர்வதேச கிரிமினல் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும், இந்திய சிறைகளில் வாடும் அப்பாவி விசாரணை கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மக்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்திட வேண்டும் என தீர்மானங்கல் நிறைவேற்றப்பட்டது.

    இறுதியில் புதிய தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். தேசிய தலைவர் கே.எம். ஷரீஃப் அவர்கள் தனது உரையில் மக்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார். மூன்று நாட்கள் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் நாட்டின் பல பாகங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 190 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கே.எம். ஷரீஃப்
தேசிய தலைவர் (கர்நாடகம்)




ஓ.எம். ஏ. ஸலாம்
பொதுச்செயலாளர் (கேரளம்)




முஹம்மது இலியாஸ் தும்பே
செயலாளர் - கர்நாடகம்




முஹம்மது அலி ஜின்னா
செயலாளர் - தமிழகம்




முஹம்மது ஷஹாபுதீன்
பொருளாளர் - மேற்கு வங்கம்



பேராசிரியர். கோயா
துணைத்தலை

0 comments:

Post a Comment