Saturday, December 29, 2012

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: ஜன-4க்குள் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

29 Dec 2012
 
    சென்னை:தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வரும் 4 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் மகள் புனிதா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யபட்டார்.
 
    இந்த சம்பவம் தொடர்பாக சுப்பையா என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர் இந்த கொலை வழக்கு குறித்து நீதிமன்றம் தானே முன்வந்து விசாரனைக்கு எடுக்க கோரி வியாழக்கிழமை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வெங்கட்ராமன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
 
    வழக்கை விசாரித்த நீதிபதி, தூத்துக்குடி மாணவி வழக்கை விசாரிக்கக் கோரி தொடரப்பட்ட பொது நல மனுவில் எந்த வித உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை, எனவே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றார். மேலும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து வருகிற 4-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார். நன்றி, தூது

0 comments:

Post a Comment