DEC23, கடந்த 12ந்தேதி டெல்லி "DDA" நிர்வாகம், வக்ப் வாரியத்துக்கு சொந்தமான "கௌசியா பள்ளிவாசலை"யும், நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய அராஜக செயலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
கௌசியா காலனி விஷயம் குறித்து, நாளை (24/12) சிறப்புக்கூட்டத்தை கூட்டி விவாதிக்கிறார், மாநில முதலமைச்சர் ஷீலா தீட்சித்.
டெல்லியின் கடும் குளிரிலும்-பனியிலும், மேற்கூரையில்லாத வெட்டவெளியில் வேதனை அனுபவிக்கும் மக்கள் பிரச்சினைக்கு, நாளும் ஆதரவு பெருகிவருகிறது.
இந்நிலையில், நேற்று (22/12) டெல்லி மாநில வக்ப் வாரியத்தின் அவசரக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, உள்ளே வந்த டெல்லி மாநில சிறுபான்மை ஆணைய முன்னாள் தலைவர் கமால் பாரூக்கி, சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
Delhi Development Authority (DDA) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலத்தை கையகப்படுத்தி "அறிவிக்கை" வெளியிட்டதென்றால், இந்த நிலம் யாருக்கு சொந்தமானது?
அரசுக்கு சொந்தமானது என்றால், அதை கையகப்படுத்தும் அறிவிப்பு எதற்கு?
வக்புக்கு சொந்தமான நிலமென்றால், அதற்க்கான பணத்தை வக்ப் வாரியத்துக்கு செலுத்தப்பட்டு விட்டதா?
DDAவிற்கு எதிராக, வக்ப் வாரியம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? போன்ற
பல கேள்விகளை தொடுத்தார்.
இறுதியாக பேசிய வக்ப் வாரிய தலைவர் "சௌத்ரி மதீன் அஹ்மத்" கடந்த காலங்களில் அரசின் அத்துமீறல்களை பொறுத்துக்கொண்டதை போல, கௌசியா காலனி விஷயத்தில் அமைதி காக்க முடியாது.
இதற்காக "சிறை செல்லவும்" தான் தயாராக இருப்பதாக கூறினார், மதீன்.
0 comments:
Post a Comment