31 Dec 2012
புதுடெல்லி:டெல்லி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஜந்தர்மந்தரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட ஏ.பி.வி.பி ஹிந்த்துவா தீவிரவாதிகளை போலீஸ் கைது செய்துவிட்டு மேலிட உத்தரவின்பேரில் விடுவித்துள்ளது.
ஜந்தர் மந்தரில் இருந்து கன்னாட்ப்ளேஸை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றதை போலீஸ் தடுத்தபொழுது வன்முறை உருவானது. போலீஸ் வைத்திருந்த இரும்பு தடுப்புகளை அகற்றிவிட்டு முன்னேறிய ஏ.பி.வி.பியினரை கூடுதல் போலீசார் வந்து தடுத்தனர். வன்முறைக்கு தலைமை தாங்கிய ஐந்து பேரை போலீஸ் கைது செய்தது. ஆனால்,மேலிட உத்தரவால் பின்னர் விடுவித்தது.
மாணவியின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்க ஜந்தர்மந்தருக்கு வந்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தை மற்றொரு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான பகத்சிங் க்ராந்தி சேனாவின் உறுப்பினர்கள் தடுத்து திருப்பி அனுப்பினர். ஷீலா தீட்ஷித்தை தடுக்கும்போது ஏற்பட்ட ரகளைக்கு இடையே போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை அவமதிக்கும் சம்பவமும் நடந்தது. ஷீலா தீட்ஷித்தை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுற்றி வளைக்கும் காட்சியை கேமராவில் பதிவுச் செய்துகொண்டிருந்த பெண்ணை, வெறிப்பிடித்த இளைஞன் ஒருவன் சில்மிஷம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நன்றி, தூது
0 comments:
Post a Comment