Saturday, December 29, 2012

தீபால்பூர்:ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் புகலிடம்!

OLYMPUS DIGITAL CAMERA   29 Dec 2012 

 
     புதுடெல்லி:இந்தியாவில் பல்வேறு பெயர்களில் இயங்கும் ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு புகலிடமாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள தீபால்பூர் திகழுகிறது. அண்மையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) இப்பகுதியில் இருந்து 3 ஹிந்துத்துவா தீவிரவாதிகளை கைது செய்தது.
 
    ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளையும், கொலைகளையும் சதித்திட்டம் தீட்டுவதும், செயல்படுத்துவதும், அவற்றை நடத்திவிட்டு தலைமறைவாக இருப்பதும் தீபால்பூரில் ஆகும். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா தீவிரவாதி ராஜேந்தர் சவுத்ரி என்ற சமுந்தரை என்.ஐ.ஏ சில தினங்களுக்கு முன்பாக தீபால் பூரில் இருந்து கைது செய்தது.
 
    கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் பிரச்சாரக் சுனில் ஜோஷிதான் இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளின் பின்னணியில் முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்டான் என்று ராஜேந்தர் சவுத்ரி என்.ஐ.ஏவுக்கு வாக்குமூலம் அளித்துள்ளான்.
 
    1999-2000 காலக்கட்டத்தில் சுனில் ஜோஷி தீபால்பூருக்கு வந்துள்ளான். பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அமைப்புகளை உருவாக்கி அவற்றை ஒருங்கிணைப்பதில் முனைப்புடன் செயல்பட்டுள்ளான். அந்தந்த பகுதிகளில் ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்களுக்கு முக்கிய பணிகளை அளித்தவனும் சுனில் ஜோஷி ஆவான்.
 
   2003-ஆம் ஆண்டு குர்தி கிராமத்தில் காங்கிரஸ் தலைவர் ப்யார்சிங் நினாமாவின் கொலையில் ஜோஷியின் தொடர்பு வெளியானதை தொடர்ந்து அவன் தீபால்பூரில் தலைமறைவாக இருந்துள்ளான். நினாமாவின் கொலை வழக்கை தற்போது என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. நினாமாவின் கொலையில் அண்மை பகுதிகளைச் சார்ந்த மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏவிடம் சவுத்ரி வாக்குமூலம் அளித்துள்ளான்.
 
    தீபால்பூரில் உள்ள ரெஷம் கேந்த்ரா என்ற பகுதியில் வைத்து வெடி குண்டுகளை வெடிக்க வைத்து சுனில் ஜோஷி சோதனை நடத்தியுள்ளான். ஆனால், இச்சோதனை தோல்வியை தழுவியது. கிராம எல்லையில் உள்ள ஒரு பசுக்களை கட்டும் இடத்தில் குண்டுகளை ஜோஷி பதுக்கி வைத்துள்ளான். 2007 டிசம்பர் மாதம் ஜோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டான்.
 
    ஜோஷி பல தகவல்களின் ரகசியங்கள் குறித்து அலட்சியமாக செயல்பட்டதால் ராஜேந்தர் சவுத்ரியே அவனை கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால், ஜோஷி கொல்லப்பட்டவுடன் கமல் சவுகான், டான் சிங், தேஜ்ராம், சஞ்சீவ் உபாத்யாய் ஆகியோர் அவ்விடத்தை காலி செய்துவிட்டனர்.
 
    சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, மலேகான் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய இதர நான்கு பேரையும் தீபால் பூரில் இருந்து என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.
 
    இப்பகுதியில் வேறு சிலரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் கைதுகள் நிகழும் எனவும் என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 நன்றி, தூதூ

0 comments:

Post a Comment