கோத்ரா:அப்பாவியான, கண்பார்வை இழந்த தன்னை அநியாயமாக ஒன்பது வருடங்கள் சிறையில் அடைத்த பயங்கரவாதி மோடியை எதிர்த்து தனது அகக்கண்ணின் வெளிச்சத்தில் வாக்களித்துள்ளார் இஸ்ஹாக் முஹம்மது மம்முது. சிறையில் இருந்து விடுதலையான பிறகு நடைபெறும் முதல் தேர்தலில், தனது துயரம் இனி யாருக்கும் வரக்கூடாது என்ற பிரார்த்தனையுடன் இஸ்ஹாக் முஹம்மது, ஒருவரின் உதவியுடன் நேற்று ஜஹுர்புரா குஜராத்தி ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு வந்து வாக்களித்தார்.
2002-ஆம் ஆண்டு கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீப்பற்றிய சம்பவத்தை தனது நண்பர்கள் மூலமே தெரிந்து கொண்டார் இஸ்ஹாக் முஹம்மது. ஊன்றுகோலின் உதவியுடன் மட்டுமே நடக்கும் இஸ்ஹாக், உறவினரின் வீட்டில் இருக்கும் வேளையில் மோடியின் போலீஸ் பிடித்து சென்று கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றவாளியாக்கியது.
ரெயிலில் சலுகை கட்டணத்துடன் பயணம் செய்ய மூன்று தடவை அரசு மருத்துவர்கள் இஸ்ஹாக், கண்பார்வை இழந்தவர் என்று அளித்த சான்றிதழ்களை காண்பித்த பிறகும் மோடியின் ஹிந்துத்துவா போலீஸ் அலட்சியம் செய்துவிட்டது. கொலை, குற்றகரமான சதித்திட்டம் ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டு இஸ்ஹாக் சிறையில் அடைக்கப்பட்டார்.
பொடா சட்டத்தின் கீழ் பரோல் கூட கிடைக்காமல் சிறை வாசம். ஒருமுறை விசாரணை நீதிமன்றத்தில் இஸ்ஹாக்கின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்தபொழுது நீதிபதி, கண் பார்வை தெரியாத இவர் எவ்வாறு கொலைச் செய்தார்? என்று கேள்வி எழுப்பினார். அப்பொழுது மெகா ஃபோன் மூலமாக ரெயில் பெட்டி பற்றி எரியும் பொழுது’ அவர்களை கொல்லுங்கள்’ என்று இஸ்ஹாக் கூறியதாக மோடியின் போலீஸ் விசித்திரமான காரணத்தை கூறியது.
மேலும் சதித்திட்டம் தீட்டியதிலும் இஸ்ஹாக் பங்கேற்றார் என்று போலீஸ் கூறியது. மோடி போலீஸின் முட்டாள்தனமான வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதியும் ஜாமீனை மறுத்தார். துயரம் நிறைந்த ஒன்பது ஆண்டுகள் சிறை வாழ்க்கையின் போது மரணமடைந்த தாய் மற்றும் சகோதரி கணவரின் இறுதி சடங்குகளில் கூட(ஜனாஸா) இஸ்ஹாக்கால் பங்கேற்க முடியவில்லை.
இறுதியாக ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நீதிமன்றம் இஸ்ஹாக் நிரபராதி என்று கூறி இதர 14 பேருடன் சேர்த்து விடுதலை செய்தது. சிறை வாழ்க்கை இஸ்ஹாக்கின் இளமையையும், வாழ்க்கையையும் வீணாக்கிவிட்டது. கோத்ராவில் ஜஹுர்புரா மஸ்ஜிதில் பிறருடையை கருணையை எதிர்பார்த்து தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார் இஸ்ஹாக். 42 வயதான பிறகும் இன்னமும் திருமணம் புரியாமல் உள்ளார் இஸ்ஹாக். மஸ்ஜிதுக்கு அருகே உள்ள ஒரேயொரு அறையை மட்டுமே கொண்ட வீட்டில் தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்துவருகிறார் அவர்.
தாமதமாக கிடைக்கும் நீதி, நீதியை மறுப்பதாகும் என்று உச்சநீதிமன்றம் கூறியது இஸ்ஹாக்கிற்கு தெரியாது. பார்வையில்லாத தான், நிரபராதி என்பதை நிரூபிக்க ஒன்பது ஆண்டுகள் சிறையில் பலிகொடுக்க நேர்ந்தது என்பது மட்டும் இஸ்ஹாக்கிற்கு தெரியும். நூறு குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்ற இந்திய நீதிபீடங்களின் கொள்கை வாக்கியமும் இந்த அப்பாவியை காப்பாற்றவில்லை.
நிரபராதியாக ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகு குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால், மோடி அரசும், நீதிமன்றமும் இவருக்கு இழப்பீடு வழங்கவில்லை. இழப்பீட்டைக் கோரி உயர் நீதிமன்றங்களை அணுகுவதற்கு அன்றாட உணவுக்கு அல்லாடும் இஸ்ஹாக்கால் அவ்வளவு தொகையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
இந்த அப்பாவிக்கு யார் தான் உதவுவார்? அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் என்னதான் தீர்வு? நன்றி தூது
0 comments:
Post a Comment