Tuesday, December 25, 2012

குஜராத் எம்.எல்.ஏக்களில் 57 பேர் கிரிமினல்கள் : "எலெக்ஷன் வாட்ச்" ஜெகதீப் சோக்கர் தகவல்!

    DEC25,
 
     குஜராத் சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 182 எம்.தெரிவித்தார்.எல்.ஏக்களில் 57 பேர் மீது கொலை, கற்பழிப்பு, கொலை முயற்சி, போன்ற "கிரிமினல்" வழக்குகள் நிலுவையில் உள்ளதாக "குஜராத் எலக்ஷன் வாட்ச்" அமைப்பின் பேராசிரியர் ஜெகதீப் சோக்கர்

இதுகுறித்து, ஜெகதீப் சோக்கர் கூறியதாவது:

    மொத்தம் உள்ள 182 எம்.பிக்களில் 57 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
 
     24 பேர் மீது கொலை, கற்பழிப்பு, கொலை முயற்சி என தீவிரமான வழக்குகள் உள்ளன.
 
     பா.ஜ.க.வின் சங்கர் செளத்ரி, ஜேத்தா பர்வத், அமீத் ஷா ஆகியோர் மீது மிகவும் தீவிரமான வழக்குகள் உள்ளன.
 
    பர்வத் மீது கற்பழிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.
 
     இந்த வழக்கு இவர் முன்பு "போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்தபோது" 1998ம் ஆண்டு தொடரப்பட்டதாகும்.
 
      வாசவா எம்.எல்.ஏ. மீது கொள்ளை, கொலை, கொலை முயற்சி என 15 வழக்குகள் உள்ளன.
 
      அமீத் ஷா மீது, சோராபுதீன் - அவரது மனைவி கெளசர் பீ, துள்சிராம் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்டரில் கொன்றதாக வழக்கு உள்ளது.
 
     கடந்த சட்டசபையில் 26 சதவீத "கிரிமினல்கள்" உறுப்பினர்களாக இருந்தனர்.
 
    இந்த முறை இது 31 சதவீதமாக உயர்ந்துள்ளது.

0 comments:

Post a Comment