Monday, December 17, 2012

கைது செய்யப்பட்டுள்ள "காவி பயங்கரவாதி" குறித்த திடுக்கிடும் தகவல்!

    DEC16, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வைத்த வழக்கில், ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த "தலைமறைவு தீவிரவாதி" ராஜேந்தர் சௌத்ரி, உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
    68 பேர் உயிரிழந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த வழக்கில், ரூ 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி ராஜேந்தர் சௌத்ரி, நேற்று முன்தினம் (15/12) மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள நாக்தா என்னுமிடத்தில் கைது செய்யப்பட்டான்.
 
    தனது தலைக்கு பரிசு அறிவித்து போலீஸ் தேடிவருவதை அறிந்த "ராஜேந்தர் சௌத்ரி" தனது பெயரை "சமந்தர் சிங்" என்று மாற்றிக்கொண்டான்.
 
     முன்னதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவாமி அசீமானந்தா, லோகேஷ் சர்மா, தேவேந்தர் சிங் ஆகிய மூவர் ஜெயிலில் உள்ள நிலையில், ராம்சந்தர் என்ற "ராம்ஜி" மற்றும் "சந்தீப் டாங்கே" ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

     தற்போது, ராஜேந்தர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த அதே குழு தான், "மக்கா மசூதியிலும்" குண்டு வைத்ததாக கூறுகிறான்.

     2007 பிப்ரவரி 18,ல் சம்ஜோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்த இவர்கள், 2007 மே மாதம் 18 ந்தேதி, மக்கா மசூதியில் குண்டு வைத்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி ராஜேந்தர் என்ற சமந்தர் சிங்கிடம் நடத்தப்பட்டுவரும் விசாரணையில், மேலும் பல முக்கியத்தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர், NIA (National Investigation Agency) அதிகாரிகள்.

0 comments:

Post a Comment