19 Dec 2012
அஹ்மதாபாத்:பா.ஜ.க எம்.எல்.ஏயின் மெய்க்காப்பாளர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ ஜேதா தர்வாத் போலீஸாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பிவிட்டார்.
தலையில் காயமடைந்ததை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தர்வாத், அங்கிருந்து போலீஸை ஏமாற்றிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
சம்பவத்தை தொடர்ந்து பாதுகாவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த எட்டு போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக போலீஸ் ஆலோசித்துவருகிறது. கோத்ராவில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பா.ஜ.க எம்.எல்.ஏ தர்வாத், சி.டி ஸ்கேன் எடுப்பதற்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது போலீஸை ஏமாற்றிவிட்டு தப்பிவிட்டார் என்று டி.ஐ.ஜி சித்தரஞ்சன் சிங் தெரிவித்தார்.
நேற்று முன் தினம் டார்ஸாங் கிராமத்தில் வாக்குச் சாவடியில் வைத்து சிலர் தர்வாத் மீது கல்வீசினர். இதனைத் தொடர்ந்து அவரது மெய்க்காப்பாளர் துப்பாக்கியால் சுட்டார். கல்வீச்சில் தர்வாதின் தலையில் காயம் ஏற்பட்டது.
தர்வாத் மற்றும் 10 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் கள்ள ஓட்டு போடுவதற்காக தர்வாத் தனது ஆதரவாளர்களுடன் வாக்குச்சாவடிக்கு வந்தார் என்று எதிர் கட்சியான காங்கிரஸின் வேட்பாளர் தக்ஹத் சிங் சோலங்கி குற்றம் சாட்டுகிறார். நன்றி, தூது
0 comments:
Post a Comment