22 Dec 2012
லண்டன்:பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவற்றில் அனைத்து நாடுகளை குறித்த அதிர்ச்சியளிக்கும் செய்திகள் இடம்பெறும் என்று விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்சே கூறியுள்ளார்.
லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் 200-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அஸாஞ்சே இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் செய்தியாளர்களும் கலந்து கொண்டனர்.
பாலியல் கொடுமை வழக்கில் விசாரணைக்காக சுவீடனுக்கு நாடு கடத்த பிரிட்டீஷ் போலீஸ் தீர்மானித்ததை தொடர்ந்து ஜூலை மாதம் முதல் அஸாஞ்சே ஈக்வடார் நாட்டில் அபயம் தேடியுள்ளார்.
’சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைக் குறித்த ரகசியங்கள் எங்கள் வசம் உள்ளன. அடுத்த வருடம் துவக்கத்தில் அவை அனைத்தும் வெளியிடப்படும். கடந்த ஆண்டுகளைப் போலவே எங்களது உறுப்பினர்களுக்கு 2013 ஆம் ஆண்டு பிசியான ஆண்டாக இருக்கும். எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவோருக்கு எப்பொழுதும் வாசல்கள் திறந்தே உள்ளன.
உண்மையான ஜனநாயகம் என்பது வெள்ளைமாளிகையும், கேமராக்களும் அல்ல. சத்தியத்தை ஆயுதமாக்கி (எகிப்தில்) தஹ்ரீர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் நடத்திய போராட்டங்களாகும்’ – இவ்வாறு அஸாஞ்சே கூறினார். வியாழக்கிழமை பொது மக்கள் மத்தியில் உரையாற்றுவேன் என்று முன்னரே அஸாஞ்சே ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார்.
0 comments:
Post a Comment