27 Dec 2012
புதுடெல்லி:பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் குற்றமற்றவர் என விடுதலை செய்த பேராசிரியர் கிலானியை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றவர்கள் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளான ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஆவர். கிலானியை தாங்கள் தாம் துப்பாக்கியால் சுட்டதாக சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் அண்மையில் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதி ராஜேந்தர் சவுத்ரி ஒப்பு கொண்டுள்ளான்.
பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் 2001-ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் கிலானியை விடுதலை செய்தது. 2005-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி வழக்கறிஞரை சந்திக்கும் வேளையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய முயன்றனர். அஜ்மீர் தர்கா மற்றும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான லோகேஷ் சர்மா அப்பொழுது ராஜேந்தர் சவுத்ரியுடன் இருந்துள்ளான்.
2003-ஆம் ஆண்டு சதித்திட்டம் தீட்டிய கொலை முயற்சிக்கு 2007-ஆம் ஆண்டு ராஜேந்தர் சவுத்ரியால் கொலை செய்யபட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி தலைமை வகித்துள்ளான். கிலானியை சுட்டவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் என்று என்.ஐ.ஏ, டெல்லி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லோகேஷ் சர்மா, டெல்லி போலீசிடம் ஒப்படைக்கப்படுவார்.
அதே வேளையில், தன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பிறகும் போலீஸ் தன்னிடம் விபரங்களை கேட்கவோ, விசாரணை நடத்தவோ செய்யவில்லை என்று கிலானி நினைவுக் கூர்ந்தார். அதற்கு பதிலாக, குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுவித்த தன்னை போலீஸ் தீவிரவாதியாக சித்தரித்ததுடன் தனது குடும்பத்தை கொடுமைப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். நன்றி, தூது
0 comments:
Post a Comment