Monday, December 17, 2012

மத்திய பிரதேச அரசு "காவி" பயங்கரவாதிகளுக்கு "புகலிடம்" தருகிறது : திக் விஜய் சிங் குற்றச்சாட்டு!

    DEC17, மத்திய பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு "குண்டுவெடிப்பு" குற்றவாளிகளை பாதுகாக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டு வருவதாக, முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான, திக் விஜய் சிங் கூறியுள்ளார்.
 
    குற்றவாளிகளை மறைத்து வைப்பதும் - பாதுகாப்பு வழங்குவதும், சட்டப்படி குற்றம் என்றார் அவர். நேற்று முன்தினம் இரவு, உஜ்ஜைனை அடுத்த "நாக்தா"வில் வைத்து "காவி பயங்கரவாதி" ராஜேந்தர் சௌத்ரி கைது செய்யப்பட்டுள்ளதால், பா.ஜ.க. அரசு அவர்களை பாதுகாப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்கிறார், திக்விஜய் சிங்.
 
    ரூ 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்த குற்றவாளியை மத்திய போலீஸ் படையினரால் பிடிக்க முடியும்போது, மாநில அரசால் ஏன் அவர்களை கைது செய்ய முடியவில்லை? எனக்கேள்வி எழுப்பிய திக்விஜய் சிங், குற்றவாளிகளை பாதுகாத்த மாநில போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார்.
 
    மேலும், தேடப்படும் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் ராம்சந்தர் என்ற "ராம்ஜி" மற்றும் "சந்தீப் டாங்கே" ஆகியோரும், மத்திய பிரதேசத்தில் தான் ஒளிந்துக்கொண்டிருப்பதாகவும், அவர்கள் எங்கு உள்ளனர் என்ற முழு விவரங்களும், மத்திய பிரதேச போலீசுக்கு நன்கு தெரியும் என்று அடித்துக்கூறும் திக் விஜய் சிங், பயங்கரவாதிகளுக்கு மாநிலத்தை ஆளும் பாஜக அரசு, ஆதரவளிப்பதாகவும் கூறுகிறார்.
    இந்திய தேசத்தில், ஒரு புறம் "காவி பயங்கரவாதம்" மறுபுறம் முஸ்லிம்களை மூர்ச்சையாக்கும் "அரச பயங்கரவாதம்" இவர்களுக்கு மத்தியில் கையாலாகாத காங்கிரஸ். விரக்தியின் விளிம்பில் நிற்கும் முஸ்லிம்கள், வீடுகளில் முடங்கி விடப்போகிறார்களா? வீறுகொண்டு எழுந்து நாட்டை மீட்கப்போகிறார்களா? இது தான் நாளைய உலகம் காணவிருக்கும் சரித்திரம்.

0 comments:

Post a Comment