Monday, December 24, 2012

ஹிந்துத்துவா சக்திகளின் தலையீடே டெல்லி வன்முறைக்கு காரணம்!

Hidutuva activists burn an effigy of Delhi Chief Minister Sheila Dikshit  
 
     புதுடெல்லி:டெல்லியில் ஓடும் பேருந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட கொடிய செயலைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரியும் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதற்கு காரணம், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மற்றும் பாபா ராம்தேவின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஹிந்துத்துவா வகுப்புவாத சக்திகளின் தலையீடே காரணம் என கூறப்படுகிறது.
 
      காவி ரிப்பன் தலையில் கட்டிய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள் போலீஸ் தடுப்புகளுக்கு மேலே ஏறி நின்று போலீஸார் மீது தாக்குதலை நடத்தினர். தீவிர ஹிந்துத்துவா இயக்கமான பகத்சிங் க்ராந்தி சேனாவும், உணர்ச்சியை தூண்டும் கோஷங்களுடன் போராட்டக்காரர்கள் மத்தியில் நுழைந்தது. இந்தியா கேட்டில் மாலையில் பாபா ராம்தேவ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் கெஜ்ரிவாலும் போராட்டத்தில் பங்கேற்றனர். மாலையிலேயே போராட்டம் தீவிரமடைந்தது.
 
      ஐஸா, டி.ஒய்.எஃப்.ஐ அமைப்புகளைச் சார்ந்தவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
எந்த இயக்கத்தையும் சாராத இளைஞர்கள் தாம் போராட்டத்தில் பெரும் திரளாக கலந்துகொண்டனர். இந்நிலையில் சங்க்பரிவாரின் தலையீடே அமைதியான போராட்டத்தை வன்முறையாக மாற்றியது. மாணவர்களை உபயோகித்து போலீஸாரை தாக்கியதோடு, பொதுச் சொத்துக்களுக்கும் இவர்கள் சேதத்தை ஏற்படுத்தினர்.
 
     நேற்று முன் தினம் நடந்த போராட்டம், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் மூலமாக விடுக்கப்பட்ட மெஸேஜ்களின் அடிப்படையில் மக்கள் திரண்டனர். ஆனால், உள்துறை அமைச்சருடன் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பெரும்பாலோர் கலைந்து சென்று விட்டனர். ஆனால், ஒரு கூட்டத்தினர் கலைந்து செல்லவில்லை. நேற்று விடுமுறை தினம் என்பதால் மீண்டும் போராட்டம் நடத்த மாணவர்கள் திரண்டனர். ஆனால், நேற்று முன் தினம் கூடிய அளவுக்கு மக்கள் கூட்டம் இல்லை. எனினும், ஹிந்துத்துவா வகுப்புவாத சக்திகளின் தலையீடே போராட்டத்தை வன்முறையாக மாற்றியது. மாணவர்களிடையே வெளி சக்திகள் ஊடுருவி வன்முறையை ஏற்படுத்தியதாக போலீசாரும் தெரிவித்துள்ளனர். நன்றி, தூது

0 comments:

Post a Comment