Monday, December 31, 2012

பள்ளிகளுக்கு துப்பாக்கி எடுத்துச்செல்ல அமெரிக்காவில் ஆசிரியர்களுக்கு அனுமதி!

31 Dec 2012 US School Teachers Could Carry Guns To School
 
    வாஷிங்டன்:சாண்டி ஹூக் பள்ளியில் ஆடம் லான்சா என்பவனால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்கள் ஆசிரியர்களை துப்பாக்கி எடுத்துவர அனுமதிப்பது குறித்து ஆலோசைனை செய்து வருகின்றனர்.
 
    இதனைத் தொடர்ந்து உதாஹ் ஷூட்டிங் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் கடந்த வியாழன் அன்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கட்டணம் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இதுபற்றி அந்நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர் பில் ஸ்காட் தங்களிடம் 180 இடங்கள் மட்டுமே உள்ளது என்றும் ஆனால் 400 இடங்கள் தேவைப்படுவதாகவும். மேலும் தாம் அனைத்து ஆசிரியர்களும் ஆயுதம் வைத்திருக்குமாறு கூறவில்லை ஆனால் அவர்கள் பயிற்சி எடுக்க விரும்பினால் உதாஹில் பயிற்சி எடுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.
 
   இதற்கிடையில் அரிசோனாவின் அட்டர்னி ஜெனரல் டோம் ஹோர்னே ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசியரையோ அல்லது நிர்வாகியையோ சாண்டி ஹூக் துப்பாக்கி சூடு சம்பவங்கள் மாதிரி நடைபெறாமல் இருக்க பயிற்சி அளிக்கலாம் என்று திட்டத்தை முன்வைத்துள்ளார்.
 
    மேலும் ப்ளோரிடா, மின்னெசோட்டா, ஒரேகோன் தெற்கு டகோட்டா மற்றும் டென்னிசி ஆகிய மாகாணங்களில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்துவர அனுமதி அளிக்கும் சட்டத்தை ஏற்ற சட்டவல்லுனர்கள் வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் ஆயுதம் ஏந்திய போலிஸ் அதிகாரி ஒருவரை நியமிக்க தேசிய ரைபிள் கழகத்தின் நிர்வாக இயக்குனர் வைனே லா பிஎர்ரெ பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்காவில் இதுவரை 4.5 மில்லியன் ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நன்றி, தூது

0 comments:

Post a Comment