Monday, December 31, 2012

ஊழல் அரசு இயந்திரங்களால் சட்டங்களை செயல்படுத்த முடியுமா?


       Dec 31: மருத்துவ மாணவி ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு, மரணம் அடைந்ததை அடுத்து, இதுபோன்ற குற்றங்களை தடுக்க சட்டங்கள் திருத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

     இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி, ஜே.எஸ்.வர்மா தலைமையில் குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது. கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, "ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப் போல் காயடிப்பு முறை மற்றும் 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கலாம்' என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

     கற்பழிப்பு தொடர்பான வழக்குகளை, விரைவு கோர்ட்டுகள் மூலம் விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட, பல விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.மேலும், சிறார்களுக்கான வயது வரம்பை குறைக்கவும், 15 வயதுக்கு உட்பட்டோரை மட்டும், சிறார் சட்ட வரம்புக்குள் கொண்டு வரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    சிந்திக்கவும்: இருக்கிற சட்டங்களே போதுமானவை அதை கொண்டே தண்டிக்க முடியும். கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டதற்கு புதுக்கோட்டை செசன்சு நீதிமன்றம் பிரேமானந்தா சாமியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.

     இதுபோல் தீர்ப்புகள் பல வழங்கப்பட்டுள்ளன அதனால் இருக்கும் சட்டங்கள் போதுமானது அதை வைத்து நடவடிக்கைகளை எடுப்பது யார்? என்பதே இங்கே கேள்வி. ராணுவ மற்றும் போலீஸ் பொறுக்கிகள் இதுபோன்று கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடும்பொழுது இதே சட்டம் பாராபட்சம் இல்லாமல் பாயுமா?

     ஆயிரம் சட்டங்களை போட்டு எதற்கு அதை செயல்படுத்தும் அரசு இயந்திரம் சாக்கடையாக இருக்கும் பட்ச்சத்தில் அது சாதாரண பலவீனமான குடிமக்கள் மேல்தான் பாயும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இதே கற்பழிப்பு சம்பவங்களில் ஒரு மந்திரியின் மகனோ அல்லது ஒரு அதிகாரியின் மகனோ ஈடுபட்டால் சட்டம் வளைந்து கொடுத்து விடும் என்பதே இதில் உண்மை.


*இந்த சாக்கடை அரசு இயந்திரங்களா சட்டங்களை செயல்படுத்த போகின்றன. என்று லஞ்சம் ஒழிகிறதோ அப்பொழுதுதான் இது போன்ற சட்டங்கள் செயல்பட ஆரம்பிக்கும்*
*மலர் விழி*

0 comments:

Post a Comment