29 Dec 2012
புதுடெல்லி:சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஸ்மி, அட்வைசரி போர்ட் ஆஃப் எஜுகேஷன்(சி.எ.பி.இ) உள்ளிட்ட ஐந்து அரசு குழுக்களில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் மோடியின் வெற்றிக்கு சாதகமாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டது என குற்றம் சாட்டி அவர் ராஜினாமா செய்துள்ளார்.
அரசு சாரா அமைப்பான அன்ஹதின் ஸ்தாபக உறுப்பினரான ஷப்னம் ஹாஸ்மி, சி.எ.பி.இ , மவ்லானா ஆஸாத் எஜுகேஷன் ஃபவுண்டேசன், நேசனல் மானிட்டரிங் கமிட்டி ஃபார் மைனாரிட்டி எஜுகேஷன், தேசிய எழுத்தறிவு மிஷன் கவுன்சில், அஸெஸ்மெண்ட் அண்ட் மானிட்டரிங் அதாரிட்டி ஆஃப் ப்ளானிங் ஆகிய குழுக்களில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
மோடி அரசை வீழ்த்த நினைத்த ஒடுக்கப்பட மக்களுக்கு இழைக்கப்பட்ட வஞ்சனைக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக அரசு குழுக்களில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக ஷப்னம் ஹாஸ்மி தெரிவித்தார். மோடிக்கு எதிரான அலை வீசியது. ஆனால், தேர்தல் முடிவுகளில் மோடி எதிர்ப்பை காணமுடியவில்லை.
மோடி வெற்றிப்பெற எவ்வித வாய்ப்பும் இல்லாமலிருந்தது. முறைகேடுகள் பலவும் நடந்துள்ளன. அதில் ஒரு பகுதியை நிறைவேற்றியது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முக்கிய கட்சியாகும் என்று காங்கிரஸ் கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் ஷப்னம் ஹாஸ்மி தெரிவித்தார். நன்றி, தூது
0 comments:
Post a Comment