Wednesday, December 19, 2012

உலகம் அழிந்துவிடும் என அஞ்சி பங்கர்களில் (பாதாள அரண்) அபயம் தேடும் மாயன் சமூகம்!

The chambers are mean to be installed 20 feet underground - offering comfort as the world falls apart around you   

     வாஷிங்டன்:வெள்ளிக்கிழமை உலகம் அழிந்துவிடும் என நம்பும் மாயன் சமூகத்தினர், அதிலிருந்து தப்பிப்பதற்காக பிரம்மாண்டமான பங்கர்களில் அபயம் தேடியுள்ளனர். அமெரிக்காவிலும், மெக்சிக்கோவிலும் செல்வாக்கு பெற்றுள்ள மாயன் சமூகத்தினரின் காலண்டர் படி இம்மாதம் 21-ஆம் தேதி உலகம் அழிந்துவிடுமாம்.
 
    விண்வெளியில் உள்ள பொருட்கள் வெள்ளிக்கிழமை பூமி மீது விழும் என்றும் அதன் காரணமாக பூமி தரைமட்டம் ஆகிவிடும் என்பது அவர்களது நம்பிக்கை. நாஸாவில் விஞ்ஞானிகளும், பல்வேறு மதங்களின் தலைவர்களும் 21-ஆம் தேதி உலகம் அழியாது என்று அறிவுரை வழங்கிய போதும் அதனை நம்பாமல் இவர்கள் அதி நவீன தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட பங்கர்களில் தங்கியுள்ளனர்.
 
     கலிஃபோர்னியாவில் மோண்டேபெல்லோவில் உலக அழிவில் இருந்து தப்பிப்பதற்காக குண்டு துளைக்காத பங்கர் தயாரிக்கப்பட்டுள்ளது. சோபா செட், ப்ளாஸ்மா டி.வி, அலங்கரிக்கப்பட்ட குளியலறைகள், சமையலறை, படுக்கையறை ஆகிய வசதிகள் இதில் உள்ளன. அணு-இரசாயன குண்டுகளை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு நவீன தொழில் நுட்பத்தில் இந்த பங்கர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
 
     மாயன் சமூகத்தினருக்காக ரான் ஹப்பார்ட் என்பவர் பங்கர்களை தயாரித்துள்ளார். 46 ஆயிரம் பவுண்டிற்கு பங்கர்கள் விற்பனை செய்யப்படுகிறது. இப்பொழுது 2 பங்கர்கள் தயாரித்துள்ளதாகவும், அமெரிக்காவில் இதன் தேவை அதிகரித்துள்ளது என்றும் ஹப்பார்ட் தெரிவித்துள்ளார்.
 
    பங்கரின் இரு பக்கமும் உள்ளே இருந்து திறக்க முடியும். ஒவ்வொரு அறைக்குள் நுழைவதையும் சிறப்பு வாயில்கள் மூலம் தடுக்க முடியும். தனது சொந்த தேவைக்காக ஹப்பார்ட் முதலில் பங்கரை தயாரித்தார். வெள்ளிக்கிழமை இவரும் பங்கரில் அபயம் தேடுவாராம்.

0 comments:

Post a Comment