Tuesday, December 25, 2012

ஆப்கான்:அமெரிக்க போலீஸ் ஆலோசகரை சுற்றுக்கொண்ட பெண் போலீஸ்!

 Women-police-officers-und-006   25 Dec 2012

     காபூல்:அமெரிக்க போலீஸ் துறை ஆலோசகரை ஆப்கான் போலீஸில் பணியாற்றும் பெண்மணி ஒருவர் சுட்டுக்கொலைச் செய்துள்ளார். காபூலில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.2001-ஆம் ஆண்டு அமெரிக்கா ஆப்கானை ஆக்கிரமித்த பிறகு முதன் முதலாக ஒரு அமெரிக்க அதிகாரி, ஒரு பெண் அதிகாரியால் கொலைச்செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     காபூலில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் போலீஸ் தலைவரை தேடி வந்த பெண் அதிகாரிதான் இத்தாக்குதலை நடத்தினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அலுவலகத்தின் உள்ளே நுழைந்த பெண் அதிகாரி, உணவு சாப்பிட சென்றுக் கொண்டிருந்த அமெரிக்க போலீஸ் ஆலோசகரை தனது சர்வீஸ் பிஸ்டலால் சுட்டுக்கொன்றார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த பெண் அதிகாரியை பாதுகாப்பு அதிகாரிகள் கைதுச் செய்துள்ளனர். இவருக்கு தாலிபானுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாக ஆப்கான் அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
     இவ்வாண்டு மட்டும் ஆப்கான் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட நேட்டோ படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.ஆப்கான் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் அமெரிக்க படையினரும், ஆப்கான் படையினரும் கொல்லப்படுவது அதிகரித்து வரும் வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது. அதனிடையே, ஜவுஸ்ஜாண்டா மாகாணத்தில் ஆப்கான் போலீஸ்காரர் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய ஆறுபேரை சுட்டுக்கொன்றுள்ளார்.போலீசில் ஊடுருவிய தங்களுடைய உறுப்பினர்தாம் தாக்குதல் நடத்தியதாக தாலிபான் செய்தி தொடர்பாளர் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே, அமெரிக்க ராணுவ வீரன் ஜாப் ப்ரைஸ் ஆப்கானில் தற்கொலைச் செய்துகொண்டார். உஸாமா பின் லேடனை கொலைச் செய்ததாக கூறப்படும் அமெரிக்க ராணுவ பிரிவான அமெரிக்க நேவீஸில் கமாண்டராக பணியாற்றியவர் ப்ரைஸ் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி, தூது

0 comments:

Post a Comment