Monday, December 24, 2012

இமாச்சல் எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் பல கோடிகளுக்கு அதிபதிகள்!

Most of crorepatis newly elected Himachal MLAs   
 
     தர்மசாலா:இமாசலப் பிரதேச சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில் சிலரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இவர்களில் 44 பேர்கோடிகளுக்கு அதிபதிகள் ஆவர்.
 
     கோடிகளுக்கு அதிபதிகளான எம்எல்ஏக்களில் பலம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரிஜ் பிகாரி லால் புடெய்ல் ரூ.169 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். 2007-ல் இது ரூ.91.92 கோடியாக இருந்தது.
 
     சிம்லாவின் சோபல் தொகுதியைச் சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ ரூ.41 கோடியுடன் 2ஆம் இடத்தில் உள்ளார்.முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள வீரபத்ர சிங் ரூ.33 கோடியுடன் 4ஆவது இடத்தில் உள்ளார். இந்த தகவலை தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ஏடிஆர் வெளியிட்டுள்ளது.
 
     முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராமின் மகன் (காங்கிரஸ்) சொத்து மதிப்பு ரூ.3.11 கோடியிலிருந்து ரூ.29.7 கோடியாகி உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ ஜி.எஸ். பாலி சொத்து மதிப்பு ரூ.3.81 கோடியிலிருந்து ரூ.24.85 கோடியாகி உள்ளது.
 
     பிலாஸ்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பும்பர் தாகுர் சொத்து மதிப்பு அதிகபட்சமாக 75 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு ரூ.1.35லட்சமாக இருந்த இவரது சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.02 கோடியாகி உள்ளது.
 
     கசுவாலி தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ராஜீவ் சன்ஜல் சொத்து மதிப்பு 19 மடங்கு அதிகரித்துள்ளது. 2007ஆம் ஆண்டில் ரூ.1.53 லட்சத்திலிருந்து ரூ.31.15 லட்சமாகி உள்ளது. இதுபோல, ஜன்துதா தொகுதி பாஜக எம்எல்ஏ ரிகி ராம் சொத்து மதிப்பு 9 மடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரம்3 எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு சரிந்துள்ளது. நன்றி. தூது

0 comments:

Post a Comment