Wednesday, April 25, 2012

புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை விட பௌத்தர்களின் செயல் அபாயகரமானது


விடுதலைப் புலிகள், யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம் மக்களை வெளியேற்றிய சம்பவம் பலருக்கும் நினைவிருக்கலாம். யாழில் முஸ்லீம் நபர் ஒருவரின் வீட்டில் இருந்து சிங்களர்கள் கொடுத்த ஆயுதங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதால், புலிகள் அனைத்து முஸ்லீம்களையும் வெளியேறுமாறு உத்தரவிட்டனர். இச்செயல் பல காலமாக விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதனை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ஆனால் விடுதலைப் புலிகள் 
கைரிய்யா ஜும்ஆ மஸ்ஜிதை இடிக்கும் பௌத்த வெறியர்கள்

இஸ்லாமியச் சின்னங்களை அழிக்கவில்லை! அவர்கள் பள்ளிவாசல்களை நிர்மூலமாக்கவில்லை! தமது போராட்டத்துக்கு ஏதாவது முட்டுக்கட்டை நேர்ந்துவிடும் என்பதனால் அவர்களை வெளியேறச் சொன்னார்கள் அவ்வளவுதான். ஆனால் இன்றைய இலங்கை அரசு, முஸ்லீம்களை அடியோடு ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருகிறது. இதற்கான சிறந்த உதாரணம் தம்புல்லவில் உள்ள மசூதிதை பெளத்த பிக்குகள் உடைத்தது தான்! 

யாழில் இருந்து முஸ்லீம் மக்களை வெளியேறச் சொன்ன புலிகள், யாழில் உள்ள எந்த மசூதியை உடைத்தார்கள் ? எல்லா மசூதிகளும் பள்ளிவாசல்களும் அப்படியே இருந்தது அல்லவா. அவர்கள் ஒரு இனத்தை அழிக்க முற்படவில்லை! ஆனால் இலங்கை அரசோ சிறுபாண்மை இனத்தை அழிக்க அல்லவா முற்படுகிறது!சிறுபான்மையினரின் உரிமைகளைக் கொன்ற ஜனநாயகமற்ற நாடாக இலங்கை இருக்கிறது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை வைத்திருக்கும் ராஜபக்சவுக்கு எதிராக இலங்கையில் எதிர்க்கட்சி என்ற ஒன்றே இல்லை, என்று வெகு ஜன அமைப்புக்களின் ஒன்றியம் இன்று கூறியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களை யாழில் இருந்து வெளியேற்றியதை விடவும் மிகவும் கொடூரமான அநியாயத்தை இன்றைய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாகவுள்ள இனவாதக் கட்சிகளின் சிங்கள இனவாதிகள் செய்துள்ளதற்கு சான்றாக தம்புள்ள கைரியா ஜும்ஆ பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் அமைந்துள்ளது. இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதுடன் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிங்கள வெறிபிடித்த இனவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. இலங்கைக்குள் ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில், எல்லோருமே அமைதியாகிவிட்டனர். அங்கு நடத்தப்பட்ட போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக எதையும் பேசமுடியாத நிலையில், ராஜபக்ச அரசு எதிர்க்கட்சிகளைக் கட்டுப்படுத்தி, ஊடகங்களைத் தாக்கி சிறுபான்மை மக்களை எப்படி எல்லாம் சித்திரவதை செய்கிறார்கள் என்று நம்மால் காணமுடிகிறது என வெகு ஜன அமைப்புக்களின் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.ஐ.க.தே முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மாகேஸ்வரன் சிறுமான்மையினருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார், பின்னர் மாகேஸ்வரன் சுடப்பட்டார். மற்றும் தேர்தல்களில் களம் இறங்க முடியாத நிலமை அப்படி களம் இறங்கி அரசாங்கத்தை எதிர்த்து பேசினால் அரசாங்கதின் ஆதரவுரடன் இயங்கின்ற ஆயுதக் குழுக்களால் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். இதற்கு சான்றாக, இஸ்மான்கண்டு முகம்மது றியாஸ் ஆகியோர் உட்பட பலர், இப்படி கொல்லப்பட்டும் உள்ளார்கள். வட கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை பலவந்தமாக அபகரித்து வெளிமாவட்டங்களில் உள்ள சிங்களர்களை கொண்டு வந்து குடியமர்த்தப்படுகின்றனர்.ஹெல உறுமய போன்ற இனவாதிகளின் போக்கிற்கு அரசாங்கம் ஆட முற்பட்டால் இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் , முஸ்லிம் மக்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடும். அரசாங்கத்தின் இந்த சட்டவிரோத செயல் மற்றும் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக சிறுபான்மை தமிழ் , முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அந்த அமைப்பு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.

2 comments:

  1. புலிகள் செய்ததை விட இவர்கள் செய்ய வில்லை.,
    புலிகள் சிறுபான்மையாய் இருந்து கொண்டு செய்த அராஜகம் ஏராளம்.,

    ReplyDelete
  2. யாழ்பாணத்தில் எந்த சின்னத்தையும் பள்ளிவாயிளையும் விட்டு வைக்க வில்லை., யாழ்பாணத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்பதுக்கான சுவட்டை எல்லாம் அளித்து தான் இருகிறார்கள்.

    கட்டுரையாளர் முழு பூசணிக்காய் மறைக்க பார்கிறார்.

    ReplyDelete