Tuesday, April 17, 2012

மாட்டுக்கறி விருந்தால் போர்க்களமான பல்கலைகழகம் !


 ஹைதராபாத் : ஆந்திராவின் புகழ் பெற்ற உஸ்மானியா பல்கலைகழக விடுதியில் மாட்டுக்கறி மறுக்கப்படும் "உணவு பாசிசத்தை" கண்டித்து விடுதி மாணவர்கள் நடத்திய மாட்டுக்கறி விருந்து காரணமாக கல்லூரியே போர்க்களமாய் காட்சியளிக்கிறது.  ஆந்திராவின் புகழ் பெற்ற உஸ்மானியா பல்கலைகழக விடுதியில் மாட்டுக்கறி போட மறுக்கும் உணவு பாசிசத்தை கண்டித்து தலித் மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் மாட்டுகறி விருந்தை ஏற்பாடு செய்தனர். மாட்டு கறியையும் விடுதி மெனுவில் சேர்க்க கோரி நடத்தப்பட்ட விருந்தில் 200 மாணவர்களும் சில பேராசியர்களும் கலந்து கொண்டு மாட்டுக்ககறியின் மூலம் செய்யப்பட்ட பல்வேறு உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தனர். தெலுங்கானா மாணவர் அமைப்பு, ஸ்டூடண்ட் பெடரேஷன் ஆப் இந்தியா, ஜனநாயக முற்போக்கு மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய மாட்டுக்கறி விருந்தை கண்டித்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் பிஜேபியின் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தால் இரு பிரிவினருக்கும் இடையே நடந்த மோதலில் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இச்சூழலில் நேற்றிரவு மாட்டுக்கறி விருந்தில் கலந்து கொண்ட விடுதி மாணவனின் அறையை தட்டி அவனை ஏபிவிபி மாணவர் அமைப்பை சார்ந்தவர்கள் கத்தியால் குத்தியதில் அம்மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏழைகளின் ஆட்டுக்கறியாக விளங்கும் மாட்டுக்கறியில் அனைத்து வகை புரதச் சத்துகளும் உள்ளது என்றும் தங்கள் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்த ஒன்றை உணவு மெனுவில் சேர்க்க கோருவதற்கு மாணவர்களுக்கு உரிமை உள்ளது என்று கூறும் மாட்டு கறி ஆதரவாளர்கள்,  கலவரக்காரர்களை ஒடுக்க காவல்துறை தவறி விட்டது என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

thanks to asiananban

0 comments:

Post a Comment