Sunday, April 1, 2012

தேசத்தை மிரட்டும் மாவோயிஸ்டுகள்!


ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மார்ச் 2010 முதல் இன்று வரை 498ற்கும் மேற்பட்டவர்கள் மாவோயிஸ்டு திவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநிலவையில் தெரிவித்துள்ளது.
மார்ச் 2010லிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 367 தீவிரவாத தாக்குதல்களில் மாவோயிஸ்டுகள் ஈடுபட்டிருக்கின்றனர், இதில் 498 நபர்கள் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சர் நன்கிராம் கன்வர் மாநில அவையில் தெரிவித்தார்.


அவர் மேலும் கூறும்போது கொல்லப்பட்டவர்களில் 215 காவல்துறையினர், 140 துணை இராணுவ படையினர், 26 சிறப்பு காவல்துறை அதிகாரிகள், 33 அப்பாவி பொதுமக்கள், 84 கொரில்லா படையினர்களும் அடங்குவர் என தெரிவித்தார்.
மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று தான் சத்தீஸ்கர். இங்கு மாவோயிஸ்டுகள் தாக்குதல்கள் கொடூரமாக அரங்கேறி வருகின்றது. கடந்த ஏப்ரல் 2010ல் நடைபெற்ற தாக்குதலில் 76 நபர்கள் கொல்லப்பட்டனர்.

மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக கடந்த 1980 முதல் பாஸ்டர் பகுதியில் 40,000ற்கும் மேற்பட்ட கொரில்லா படையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதிலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் தாக்குதல்கள் கடந்த 6 மாதங்களில் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தேசத்தில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ஃபாசிஸ பயங்கரவாதமும், மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தான் என்பதை மேலெ குறிப்பிட்ட கணக்கெடுப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால் இன்றைய ஊடகங்கள் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதையே பரப்பி வருகின்றனர். இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தபட்ட தாக்குதல்கள் என்று முதலில் கூறப்பட்டு வந்த பெரும்பாலான தாக்குதல்களில் இந்துத்துவ பயங்கரவாதிகளே ஈடுபட்டுள்ளனர். 

1 comment:

  1. Before you start write about Maoist, please study in detail. Masoist are supported by Adivasis since Maosits are fighting for the rights of Adivasis in Thanda Karanya Forsets where Our Govt has sold the lands of Adivasis to Mining companies. Please read Vidiayal Velli for detail.

    ReplyDelete