நெல்லை: கூடங்குளம் அணு எதிர்ப்பு போராட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம் என்பதால் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. இது குறிதது இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயகுமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
கூடங்குளத்தில் மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அணு மின் நிலையத்தை செயல்படுத்தி வரும் நிலையில் அங்கு அணு உலை எதிர்ப்பாளர்கள் என கூறிக் கொண்டு உதயகுமார், புஷ்பராயன், இடிந்தகரை பாதிரியார் ஜெயகுமார் ஆகியோர் வழிகாட்டுதலில் கடந்த 8 மாதங்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த 9ம் தேதி அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஆர். நல்லக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் போராட்டக்குழுவைச் சேர்ந்த புஷ்பராயனை சந்திதுள்ளனர். அப்போது போராட்ட பந்தலில் சுயமாக சிந்திக்கத் தெரியாத ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகள் மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவிகள் சீருடையுடன் அமர்ந்திருந்தனர். பள்ளி மாணவ-மாணவிகளை போராட்டத்தில் பங்கேற்க செய்திருப்பது சட்டப்படி குற்றம் என்பதால் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
thanks to asiananban
0 comments:
Post a Comment