Wednesday, April 11, 2012

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்டது - பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு!


ஹைதராபாத்: ஆந்த்ராவில் ஆட்சி புரிந்து வரும் காங்கிரஸ் அரசாங்கம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டது என்பதை கடந்த சில மாதகாலமாக நடைபெற்ற வகுப்புவாத வன்முறைகள் சுட்டிக்காட்டுகின்றன என ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. காங்கிரஸ் அரசாங்கம் காவல்துறையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து செயல்படுத்துவதற்கு தவறிவிட்டது. சமீப காலங்களில் நடைபெற்ற அனைத்து வகுப்புவாத வன்முறை சம்பங்களின் போது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடாமல் வேடிக்கை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்திருக்கின்றனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர மாநில தலைவர் முஹம்மது ஆரிஃப் அஹமது நேற்றைய தினம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் காங்கிரஸ் அரசை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். அப்பேட்டியின் போது சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் ஆந்திர மாநில தலைவர் ரெட்டி முஸ்தாக் அஹமது உடன் இருந்தார்.


சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் தங்களை ஆந்திர மாநிலத்தில் பலப்படுத்தி வருகின்றனர். மேடக் மாவட்டம் சித்திப்பேட்டில் நடைபெற்ற வகுப்புவாத கலவரம், குர்னூல் மாவட்டம் அடோனி, கரீம் நகர், சங்கரரெட்டி என தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்ற வகுப்புவாத வன்முறைகளும் தற்போது ஹைதராபாத்தில் நடந்த வன்முறையை பார்க்கும்போதும் இரு விஷயங்கள் தெளிவாக புலப்படுகின்றன. ஒன்று ஒவ்வொரு வன்முறையின் போது காவல்துறையின் வன்முறையாளர்களை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துள்ளனர், இரண்டாவது ஒவ்வொரு வன்முறையிம் ஃபாசிஸ சங்கப்பரிவார கும்பல்களால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம் என ஆரீஃப் தெரிவித்தார்.

வி. தினேஷ் ரெட்டி காவல்துறையில் மூத்த அதிகாரியாக பொறுப்பேற்ற பின்னர் தான் அதிக அளவில் வகுப்புவாத வன்முறைகள் நடைபெற்றுள்ளது. வகுப்பு வாத வன்முறைகளை ஏற்படுத்துவதற்கும் அதனை கண்டுகொள்ளாமல் விடுவதற்கும் காவல்துறைக்குள்ளும் ஃபாசிஸ பயங்கரவாதிகள் ஊடுறுவியுள்ளார்கள் என்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐயின் தலைவர்கள் மாநில அரசிடன் 5 கோரிக்கைகளை வைத்துள்ளார்கள்.

1. மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில உடனே மேற்கொள்ள வேண்டும்.

2. வன்முறையாளர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும்.

3. சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் காவல்துறையில் ஊடுறுவுவதை தடுத்து அத்துறையை தூய்மைப்படுத்த வேண்டும்.

4.சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, ஹிந்துவாஹினி, பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

5. வகுப்புவாத வன்முறையை தடுக்கும் சட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து உடனே அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

0 comments:

Post a Comment