Wednesday, April 25, 2012

ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையின் யூதர் குடியிருப்பிடங்கள்

ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையின் மூன்று யூதர் குடியிருப்பிடங்களுக்கான முக்கியமாகப் பொறுப்பினை வகிக்கும் இஸ்ரேலின் அமைச்சர் நிலை ஆணையம், அக்குடியிருப்பிடங்களைச் சட்டப்பூர்வமாக்க முடிவு செய்துள்ளதாக இஸ்ரேல் தலைமையமைச்சர் அலுவலகம் 24ம் நாள் வெளியிட்ட செய்தியறிக்கை தெரிவிக்கிறது.
ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் அன்று தனது செய்தித்தொடர்பாளரின் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் குறிப்படுகையில், ஜோர்டான் ஆற்றின் மேற்குக் கரையின் மூன்று யூதர் குடியிருப்பிடங்களை, இஸ்ரேல் அரசு சட்டப்பூர்வமாகச் இருப்பதைக் குறித்து கவலை தெரிவித்துள்ளார். எல்லா குடியிருப்பிடங்களையும் கட்டியமைக்கும் செயல்பாடுகள் சர்வதேசச் சட்டத்துக்குப் புறம்பானவை. இது, மத்திய கிழக்கு அமைதி நெறிவரைபடத்தில் வகுக்கப்பட்ட இஸ்ரேலின் பொறுப்புகளை மீறுவது மட்டுமல்லாமல், பல்வேறு தரப்புகளின் ஆத்திரமூட்டல் செயல்பாடுகளைத் தவிர்க்கும் மத்திய கிழக்கு பிரச்சினை தொடர்புடைய நான்கு தரப்புகளின் கோரிக்கையையும் புறக்கணிக்கிறது என்று அவ்வறிக்கை கூறுகிறது.
thanks to asiananban

0 comments:

Post a Comment